24/4 டூ 263.. கேப்டனிடம் சண்டையிட்டு வெளியேறிய ஜோசப்.. 10 வீரர்களுடன் இங்கிலாந்தை வீழ்த்திய வெ.இ

Alzarri Joseph
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றன. அதனால் சமனில் இருந்த அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நவம்பர் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு பார்படாஸ் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு வில் ஜேக்ஸ் 5 ரன்களில் அவுட்டானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் ஒரு ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை வீசிய பின் தமக்கு தகுந்தார் போல் ஃபீல்டிங்கை மாற்றுமாறு கேப்டன் ஷாய் ஹோப்பிடம் அவர் சொன்னார்.

- Advertisement -

10 வீரர்களுடன்:

ஆனால் அதைக் கேட்காமல் ஷாய் ஹோப் தாம் வைத்த ஃபீல்டிங்கை தொடர்ந்தார். அந்த கோபத்துடன் பந்து வீசிய அல்சாரி ஜோசப் அடுத்த பந்திலேயே ஜேக் கோக்ஸை 1 ரன்னில் அவுட்டாக்கினார். அந்த ஓவர் முடிந்ததும் “எனக்கு தேவையான ஃபீல்டிங் செட்டிங் செய்ய முடியாதா?” என்ற வகையில் கேப்டன் ஷாய் ஹோப்பிடம் கையை நீட்டி பேசிய அல்சாரி ஜோசப் கோபத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அதே வேகத்தில் சென்ற அவர் பெவிலியனின் அமர்ந்து கொண்டார். மறுபுறம் அவரை சமாதானப்படுத்தி வர வைக்காத சாய் ஹோப் அடுத்த ஓவரை 10 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பந்து வீசி முடித்தார். அதன் பின் பயிற்சியாளர் டேரன் சம்மி சமாதானம் செய்ததால் அல்சாரி ஜோசப் மீண்டும் அடுத்த ஓவரில் களத்திற்கு வந்து தொடர்ந்து விளையாடினார். அந்த நிகழ்வு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஜேக்கப் பேத்தல் 0, கேப்டன் லிவிங்ஸ்டன் 6 ரன்களில் அவுட்டானதால் 24-4 என இங்கிலாந்து ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது மற்றொரு துவக்க வீரர் பிலிப் சால்ட் நிதானமாக விளையாடி 74 ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் ஷாம் கரன் 40, டான் மவுஸ்லி 57, ஜேமி ஓவர்ட்டன் 32, ஜோப்ரா ஆர்ச்சர் 38* (17) ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். அதனால் 50 ஓவரில் இங்கிலாந்து 263-8 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: 11/4 டூ 161க்கு ஆல் அவுட்.. அல்வா வாய்ப்பிலும் திருந்தாத ராகுல்.. இந்தியா ஏ அணியை காப்பாற்றிய ஜுரேல்

வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக மேத்தியூ போர்ட்ஜ் 3, அல்சாரி ஜோசப் 2, செபார்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 264 ரன்களை துரத்தியைவெஸ்ட் இண்டீஸ்க்கு எவின் லெவிஸ் 19 ரன்களில் அவுட்டானார். ஆனால் ப்ரெண்டன் கிங் அபாரமான சதமடித்து 102, கேசி கார்ட்டி 128* (114) ரன்கள் குவித்தனர். அதனால் 43 ஓவரிலேயே 267-2 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்றது.

Advertisement