நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 உள்ளூர் பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
அதனுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் 7ஆம் தேதி மெல்போர்ன் நகரில் இந்திய நேரப்படி காலை 5.00 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் கேஎல் ராகுல், துருவ் ஜுரேல் ஆகியோர் இந்தியா ஏ அணிக்காக புதிதாக விளையாடின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அல்வா வாய்ப்பு:
இந்தியா ஏ அணிக்கு கேஎல் ராகுல் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக சமீபத்திய தொடர்களில் மோசமாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் கடந்த காலங்களில் ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சொந்த காரணங்களுக்காக விலக உள்ளார்.
எனவே அவரை இப்போட்டியில் துவக்க வீரராக விளையாட வைத்து முதல் ஆஸ்திரேலிய போட்டியில் ரோஹித்துக்கு பதில் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் இந்த போட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் டக் அவுட்டான நிலையில் மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். குறிப்பாக அல்வா போல கிடைத்த துவக்க வீரர் வாய்ப்பிலும் அவர் முன்னேறாமல் ஏமாற்றத்தையே கொடுத்தார்.
காப்பாற்றிய ஜுரேல்:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 0, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 11/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியா ஏ 100 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது இளம் வீரர் துருவ் ஜுரேல் நங்கூரமாக விளையாடினார்.
இதையும் படிங்க: டிராவிட் மாதிரி இல்ல.. இவ்ளோ மோசமா திட்டமிடும் இந்தியாவின் பேட்டிங் கோச் யார்? பசித் அலி விளாசல்
அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த தேவ்தூத் படிக்கல் 26, நிதிஷ் ரெட்டி 16 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். இறுதியில் அரை சதமடித்து போராடிய ஜுரேல் 80 (186) ரன்களும் ப்ரசித் கிருஷ்ணா 14 ரன்களும் எடுத்த உதவியுடன் இந்தியா ஏ 161 ரன்கள் எடுத்து அவுட்டானது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு மைக்கல் நீசர் 4, வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.



