- Advertisement -
உலக கிரிக்கெட்

257 ரன்ஸ்.. 5 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. போராடிய ஆஸ்திரேலியாவை 300 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த பூரான்.. வெ.இ மிரட்டல்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் இரண்டாம் தேதி துவங்குகிறது. அதற்கு தயாராவதற்காக ஐசிசி நடத்தும் அதிகாரப்பூர்வமான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் மே 30ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் 14 (8) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் ஆஸ்திரேலிய பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். அவருக்கு மறுபுறம் ஜான்சன் சார்லஸ் நிதானமாக விளையாடி கை கொடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்:
அதை பயன்படுத்திய நிக்கோலஸ் பூரான் 2வது விக்கட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்டு 75 (25) ரன்களை 300 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய ஜான்சன் சார்லஸ் 40 (31) ரன்களில் அவுட்டானார். ஆனால் 4வது இடத்தில் களமிறங்கி தம்முடைய பங்கிற்கு ஆஸ்திரேலியாவை பந்தாடிய கேப்டன் ரோவ்மன் போவல் 4 பவுண்டரி 4 சிக்ஸர்களை விளாசி 52 (25) ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் ரூத்தர்போர்ட் தனது பங்கிற்கு முரட்டுத்தனமாக 4 பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 47* (18) ரன்களும் ஹெட்மயர் 18* (13) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 257/4 ரன்கள் குவித்து மிரட்டியது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 258 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 15, கேப்டன் மிட்சேல் மார்ஷ் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதே போல துவக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்ட முயற்சித்த ஆஸ்ட்டன் அகர் 28 (13) ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் மிடில் ஆர்டரில் ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் டிம் டேவிட் 25 (12) மேத்தியூ வேட் 25 (14) ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானார்கள். போதாக்குறைக்கு முக்கிய நேரத்தில் ஜோஸ் இங்லீஷ் 55 (30) ரன்களில் அவுட்டானார்.

இதையும் படிங்க: 158 ரன்ஸ்.. விராட் கோலி உலக சாதனையை உடைத்த பாபரின் சாதனை வீண்.. பாகிஸ்தானை பார்சல் காட்டிய இங்கிலாந்து

இறுதியில் நாதன் எலிஸ் 39 (22) ஆடம் ஜாம்பா 21* (16) ரன்கள் எடுத்தும் முடிந்தளவுக்கு போராடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 222/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2, குடகேஷ் மோட்டி விக்கெட்டுகள் சாய்த்தனர். அந்த வகையில் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் இத்தொடரை சொந்த மண்ணில் புத்துணர்ச்சி கலந்த வெற்றியுடன் துவக்கியுள்ளது.

- Advertisement -