158 ரன்ஸ்.. விராட் கோலி உலக சாதனையை உடைத்த பாபரின் சாதனை வீண்.. பாகிஸ்தானை பார்சல் காட்டிய இங்கிலாந்து

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் 3வது போட்டியும் மழையால் கைவிடப்பட்டது. அந்த நிலையில் இத்தொடரின் கடைசி போட்டி மே 30ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் பாபர் அசாம் 36 (22) ரன்களில் அவுட்டானார். இந்த 36 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 4000 ரன்களை கடந்துள்ளார்.

- Advertisement -

உலக சாதனை வீண்:
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பின் 4000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதை விட இதையும் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாபர் அசாம் இதுவரை மொத்தம் 660 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்துள்ள பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவுக்காக விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக 639 ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 23 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த ஃபக்கார் ஜமான் 9, சடாப் கான் 0, அசாம் கான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் அதிரடி காட்டிய உஸ்மான் கானும் 38 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இப்ஃதிகார் அஹ்மத் 21 (18), நாசீம் ஷா 16 (18) ரன்கள் எடுத்தும் 19.5 ஓவரில் பாகிஸ்தான் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட், அடில் ரசித், லியம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: அவர் சொன்னது உண்மை தான்.. சுமாரான பாகிஸ்தானுக்கு இந்தியாவே பரவால்ல.. ஒத்துக்கொண்ட கம்ரான் அக்மல்

அதைத் தொடர்ந்து 158 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 45 (24) கேப்டன் ஜோஸ் பட்லர் 39 (21) வில் ஜேக்ஸ் 20, ஜானி பேர்ஸ்டோ 28* (16) ஹரி ப்ரூக் 17* ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 – 0 (4) என்ற கணக்கில் தொடரை வென்ற இங்கிலாந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை காட்டியது. மறுபுறம் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் ஆறுதல் வெற்றியை கூட பார்க்க முடியாமல் பாகிஸ்தான் பரிதாபமாக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டது.

Advertisement