அவர் சொன்னது உண்மை தான்.. சுமாரான பாகிஸ்தானுக்கு இந்தியாவே பரவால்ல.. ஒத்துக்கொண்ட கம்ரான் அக்மல்

Kamran Akmal
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக அந்தத் தொடரில் பிளே ஆஃப் சுற்று துவங்குவதற்கு முன்பாகவே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் வெளியேறினார்கள். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

எனவே அதில் விளையாடுவதற்காக ஜோஸ் பட்லர், பிலிப்ஸ் சால்ட், மொய்ன் அலி, வில் ஜேக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் முன்னதாகவே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினர். அது ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு போன்ற அணிகளின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஒன்று முழுமையாக விளையாட வாருங்கள் இல்லையென்றால் இந்தியாவிற்கு வராதீர்கள் என்று இங்கிலாந்து வீரர்களை இர்ஃபான் பதான் சாடினார்.

- Advertisement -

உண்மை தானே:
அதே போல பாதியிலேயே வெளியேறிய இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். அதற்கு நாட்டுக்காக விளையாட வெளியேறிய இங்கிலாந்து வீரர்கள் நியாயமாகவே நடந்து கொண்டதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்தார். அதே சமயம் சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை விட தரமான ஐபிஎல் தொடரில் விளையாடுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதற்கு பாகிஸ்தானை சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டிகளிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் அவ்வாறு கூறியது உண்மை தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் சோகத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த சில நாட்களாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரியஸாக பேசவிவில்லை என்று நான் ஆச்சரியமடைந்தேன். அது மிகவும் வலியை கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என்று நினைக்கிறேன். அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்க்கிறோம்”

இதையும் படிங்க: 24.75 கோடிக்கு ஸ்டார்க்கை வாங்கியது ஏன்? ஆரம்பத்தில் சொதப்பியது போது சொன்னது என்ன? கம்பீர் விளக்கம்

“எனவே பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என்று மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது. ஒருவேளை நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஐபிஎல் தொடரைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்கே 40000 – 50000 ரசிகர்களுக்கு முன்னிலையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான தரமான கிரிக்கெட்டாகும்” என்று கூறினார்.

Advertisement