தல தோனியின் ஹேட்டர்களை பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா ? அவர்கள் தோனியை வெறுக்க இதுவே காரணம் – விவரம் இதோ

Dhoni Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 2007ல் இருந்து பல கோப்பைகளை வென்று சாதித்தவர் மகேந்திர சிங் தோனி .தனது அபாரமான பேட்டிங் மிகவும் எளிதாக போட்டியை முடித்து கொடுக்கும் திறனுக்காக மிகவும் பெரிதாக போற்றப்பட்டவர். சமீபகாலமாக அவரது புகழ் மங்கி கொண்டிருக்கிறது என்றே கூறலாம். அவர் என்ன நினைக்கிறார் என்று ரசிகர்களுக்கோ அல்லது இந்திய அணியின் நிர்வாகத்திற்கோ தற்போது வரை தெரியவில்லை.

dhoni

- Advertisement -

இவை அனைத்தையும் எளிதாக கடந்து விட்டு வீட்டில் ஜாலியாக இருக்கிறார். ஒரு நாள் உலக கோப்பை தொடர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை தொடர், இது மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் இவர்தான். இதுபோன்ற பல சாதனைகள் அவர் பெயரில் உள்ளது. ஆனால் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு அவருக்கு ஹேட்டர்கள் ஏராளம் இருக்கின்றனர். அதற்கான காரணங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீனியர் வீரர்களை ஒதுக்கியது

தோனி இந்திய அணிக்கு கேப்டன் ஆனபோது இந்தியாவில் இருந்த சீனியர் வீரர்கள் சச்சின், டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விரேந்தர் சேவாக் ,ராகுல் டிராவிட் போன்றவர்கள் . இவர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தனர். அதே நேரத்தில் அவர்கள் வெளியே செல்லும் நிலையும் வந்துவிட்டது. இதன் காரணமாக புதிய அணியை கட்டமைக்கும் நோக்கில் ஒவ்வொரு இளம் வீரருக்கும் புதிய வாய்ப்புகளை கொடுத்து வந்தார். குறிப்பாக 2011 உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் விரேந்தர் செவாக், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு குறைந்த வாய்ப்புகள் கொடுத்து கொடுத்து கொடுத்துவிட்டு பல இளம் பந்துவீச்சாளர்களையும், துவக்க வீரர்களையும் களமிறக்கினார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட சீனியர் வீரர்களின் ரசிகர்கள் தோனி வெறுக்க ஆரம்பித்தனர் ஆனால் அணிக்கு என்ன தேவையோ அதை தான் செய்தார் தோனி என்பது தற்போது வரை அவர்களுக்கு புரியவில்லை.

kohli dhoni

வெளிநாட்டில் சரியாக ஆடுவதில்லை

- Advertisement -

அனைத்து போட்டிகளிலும் கீப்பிங் மற்றும் கேப்டன் ஷிப்பில் அபாரமாக எப்போதும் ஜொலிப்பார் தோனி. அது உள்ளூர் ஆயினும் சரி வெளியூராயினும் சரி. கீப்பிங்கிலும், கேப்டன்ஷிப்பில்ம் அவரை அடித்துக் கொள்ளவே முடியாது. அந்த அளவிற்கு அபாரமாக செயல்படுவார். இந்த அபார தன்மை வெளிநாடு செல்லும்போது அவரது பேட்டிங்கில் பெரிதாக வெளிப்படவில்லை என்று அவரது ஹேட்டர்கள் நினைக்கின்றனர்.

ஆனால் அந்நிய மண்ணில் அனைவரையும் விட அதிக அரை சதங்கள் விளாசியுள்ளார் என்பது தற்போது வரை பதிவு செய்யப்படவில்லை. அதேநேரத்தில் 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வையும் அறிவித்து விட்டார்.

- Advertisement -

ஃபினிஷிங் சொதப்பல்

பினிஷிங் என்பதற்கு கிரிக்கெட்டில் தற்போது தோனி என்று வரும் அளவிற்கு பினிசிங்கிற்கு ஒரு அகராதியை எழுதியுள்ளார் தோனி. கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்றால் போதும் வெற்றி பெற்றுவிடலாம் என்று தற்போதைய கிரிக்கெட் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்தவரும் அவரே.

கடைசி ஓவரில் 15 ரன்களுக்கு மேல் வைத்து பலமுறை வெற்றி பெற்றுக் கொடுத்ததை நாம் கண்கூட பார்த்திருப்போம். ஆனால் சமீபகாலமாக வயது மூப்பின் காரணமாக அவரால் சரியாக ஆட முடியவில்லை என்பது நிதர்சனம். தற்போது அவரது அதிரடி ஆட்டம் இல்லை என்பதும் உண்மை தான். இதன் காரணமாகவும் அவருக்கு அதிக ஹேட்டர்கள் உருவாகிவிட்டனர்.

dhoni

சென்னை வீரர்களை ஆதரித்தல்

ஒரு கேப்டனாக இருப்பவர் தனக்கு தேவையான வீரர்களை எடுத்து அணியை கட்டமைப்பார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா மோஹித் சர்மா, ஈஸ்வர் பாண்டே போன்ற பல வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடிய பின்னர் தான் இவர்கள் அனைவரும் அணியில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனை சரியாகப் புரிந்து கொள்ளாத சென்னை அணியின் ஹேட்டர்கள் மற்றும் டோனியின் ஹேட்டர்கள் அனைவரும் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பினர். இதுவும் தோனிக்கு பல எதிர்ப்பாளர்கள் உருவாக காரணமாக அமைந்துவிட்டது

யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களமிறங்கியது

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் யுவராஜ் இறங்க வேண்டிய இடத்தில் டோனி முன்னதாகவே இறங்கினார். இப்படி சரியான ஒரு முடிவு எடுத்து இந்த போட்டியில் 91 ரன்கள் விளாசி இந்திய அணி 28 ஆண்டுகள் கழித்து கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். ஏனெனில் யுவராஜ்சிங் இடதுகை ஆட்டக்காரர் அந்த நேரத்தில் பந்து வீசி கொண்டு இருந்தது முத்தையா முரளிதரன் ,அவர் இடது கை ஆட்டக்காரருக்கு நன்றாக பந்து வீசுவார், மேலும் முத்தையா முரளிதரனை தோனி மிக நன்றாக ஆடுவார்.

yuvidhoni

இதன்காரணமாகவே யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக காலம் இருக்கும் என்று பலமுறை விளக்கம் கொடுத்தார். முன்னதாக இறங்கி சொதப்பி இருந்தால்கூட பரவாயில்லை, வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படி இருந்தும் இதனை ஒரு காரணமாக வைத்து அவரை வெறுக்கும் ரசிகர்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர்.

Advertisement