தமிழக அணியின் கேப்டன் …சிறந்த ஆல்ரவுண்டர்…ஆனால் பைனலில் சொதப்பியது ஏன் தெரியுமா ?

- Advertisement -

இந்தியா – இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான நடைபெற்று முடிந்த முத்தரப்பு நிடாஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின.இதில் இந்திய அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் சிக்ஸர் மூலமாக வெற்றிபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் மிகவும் மோசமாக விளையாடி இலகுவாக வெற்றிப்பெற்றிருக்க வேண்டிய போட்டியை தோல்வியின் விளிம்பு வரைக்கும் கொண்டுசென்றுவிட்டார்.

Vijay

- Advertisement -

மொத்தம் 19 பந்துகளை சந்தித்த அவர் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். இதிலும் மூன்று பவுண்டரிகள் அடக்கம். இறுதிக்கட்டத்தில் 18வது ஓவரில் இவர் ரன் எடுக்கமுடியாமல் தினறியது இந்திய ரசிகர்களிடையே எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.ஒரு வேளை இறுதி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்காமல் இந்தியா தோல்வியடைந்து இருந்தால் ஒட்டுமொத்த அடியும் விஜய்சங்கருக்கு விழுந்திருக்கும். நல்லவேளையாக தினேஷ் கார்த்திக் விஜய்சங்கரை காப்பாற்றி விட்டார்.

யார் இந்த விஜய் சங்கர் என்று பார்ப்போம் வாருங்கள்.தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட விஜய்சங்கர் ஆல் ரவுண்டர்.ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏற்கனவே விளையாடியவர். ஐபிஎல்-இல் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது இவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த வருடம் இவர் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

vijayshankar

ரஞ்சி கோப்பை போன்ற பல உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக விளையாடிய இவர் தமிழக அணிக்கு பல தொடர்களில் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியவர்.இவ்வளவு திறமையான வீரர் தான் பதற்றத்தின் காரணமாக இறுதி போட்டியில் சொதப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இந்திய அணிக்கு உறுதுணையாகவும் சிறப்பாகவும் விளையாடி வெற்றியை தேடித்தர விரைவில் மீண்டுவருவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement