தேவ்தத் படிக்கல் ? ப்ரித்வி ஷா ? இருவரில் யாருக்கு இடம் ? – முன்னாள் வீரர் கூறுவது என்ன ?

Padikkal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இரு அணிகளும் தற்போது தயார் நிலையில் இருக்கும் வேளையில் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sl

- Advertisement -

ஏற்கனவே அணியின் கேப்டன் ஷிகர் தவான் துவக்க வீரராக களமிறங்கு உள்ள நிலையில் அவருடன் மற்றொரு தொடக்க வீரராக களம் இறங்கப் போவது யார் ? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தவான் உடன் இணைந்து இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க வேண்டிய வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தவானுடன் ப்ரித்வி ஷா துவக்க வீரராக களமிறங்குவது தான் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் இந்த 2021 ஆம் ஆண்டு ப்ரித்வி ஷாவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதன்பிறகு ஐபிஎல் தொடரிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

shaw

மேலும் தவானுடன் இறங்கிய அனுபவம் அவருக்கு நிறைய இருப்பதன் காரணமாக அவரே தவானுடன் களமிறங்க வேண்டும் என்றும் சர்வதேச போட்டிகளில் ப்ரித்வி ஷா ஏற்கனவே விளையாடி உள்ளதால் நிச்சயம் அவர் துவக்க வீரராக விளையாடுவது சரியாக இருக்கும் எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

shaw 2

அவர் கூறியது போலவே ப்ரித்வி ஷா ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் பெற்றவர் அதேவேளையில் படிக்கல் கடந்த ஆண்டுதான் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனவர் என்பதால் அவருக்கு இன்னும் இந்திய அணியில் விளையாட சிறிது காலம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ள குறிப்பிடத்தக்கது.

Advertisement