யார் இந்தியாவை தோற்கடிக்குறாங்களோ.. அவங்க தான் 2023 உ.கோ மேல கை வைக்க முடியும் – முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அதிரடி

Rohit Shama World Cup
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை இந்தியாவில் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக நடைபெறுகிறது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற வலுவான எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் 2011 போல இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

இருப்பினும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் கடந்த மாதம் வரை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடமே இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் பும்ரா, கேஎல் ராகுல் உள்ளிட்ட முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு புதிய தெம்மை ஊட்டியுள்ளது.

- Advertisement -

இந்தியாவை தாண்டி:
அதே போல இடது கை பவுலர்களுக்கு எதிராக தடுமாறிய கதைக்கு 2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சாகின் அப்ரடியை சிறப்பாக எதிர்கொண்டு முன்னேற்றத்தை காண்பித்தனர். மேலும் பலவீனமாக இருப்பதாக பார்க்கப்பட்ட மிடில் ஆர்டரில் இசான் கிசான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் தக்க சமயத்தில் ஃபார்முக்கு திரும்பி தொடர் நாயகன் விருதை வென்றார்.

அத்துடன் இலங்கைக்கு எதிரான ஃபைனலில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியா 8வது ஆசிய கோப்பையை வெல்ல உதவினார். அது போக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சற்று தடுமாறிய சுப்மன் கில், காயத்திலிருந்து குணமடைந்து தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறிய சூரியகுமார் யாதவ் ஆகியோர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய நல்ல ஃபார்முக்கு வந்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் சரியான நேரத்தில் அனைத்து வீரர்களும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வரும் இந்தியா டெஸ்ட் ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்த முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாறு படைத்துள்ளது. இதனால் பேட்டிங்க்கு சாதகமான இந்திய மைதானங்களில் இந்திய அணியை யார் தோற்கடிக்கிறார்களோ அவர்கள் தான் 2023 உலக கோப்பையை வெல்ல முடியும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிரடியாக கூறியுள்ளார்.

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “தற்போது எனக்கு தெளிவாகி விட்டது. யார் இந்தியாவை தோற்கடிக்கிறார்களோ அவர்கள் தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும். இந்திய பிட்ச்களில் இந்திய பேட்டிங் வெறித்தனமாக இருக்கிறது. அவர்களுடைய பவுலிங் ஆப்ஷன் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு அழுத்தம் மட்டுமே அவர்களை தடுக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement