அவர் ரிட்டையராகும் போது ஆஸ்திரேலியாவின் கேப்டன்ஷிப் பதவியை விட்ருவேன்.. பட் கமின்ஸ் அறிவிப்பு

Pat cummins
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு முதலாவதாக நடந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் நியூசிலாந்தை 172 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ள ஆஸ்திரேலியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

அதன் வாயிலாக நியூசிலாந்து மண்ணில் கடந்த 31 வருடங்களாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தையும் சாதனையையும் ஆஸ்திரேலியா தக்க வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு 10 விக்கெட்டுகளையும் 46 ரன்களையும் எடுத்து முக்கிய பங்காற்றிய நட்சத்திர சீனியர் வீரர் நேதன் லயன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

கமின்ஸ் அறிவிப்பு:
இந்நிலையில் தற்போது 36 வயதாகும் நேதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் போது தாமும் ஆஸ்திரேலியாவின் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று பட் கமின்ஸ் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே குறைந்தபட்சம் தாங்கள் இருவரும் சேர்ந்து 2027 வரை ஒன்றாக விளையாடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் பட் கமின்ஸ் இது பற்றி முதல் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

“அவருக்கு உடல் நிலை மட்டுமே தடையாக இருக்கலாம். எனவே தன்னுடைய உடல்நிலையை பார்த்துக் கொண்டு வருடத்திற்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடத் தயாராக இருந்தால் நாங்கள் அவர் 2027 வரை ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்கு விரும்புகிறோம். அவரது வழியில் அதிகம் எதுவும் வரப்போவதில்லை என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“நீங்கள் ஓய்வு பெறும் போது கண்டிப்பாக என்னுடைய கேப்டன்ஷிப் பதவியை விட்டு விடுவேன் என்று ஏற்கனவே நான் அவரிடம் கூறியுள்ளேன். ஏனெனில் அவ்வாறு செய்வது என்னுடைய வாழ்க்கையையும் எளிதாக்கும். அது கேப்டன்களின் கனவாகவும் இருக்கும்” என்று கூறினார். முன்னதாக இந்தியாவை தோற்கடித்த பட் கமின்ஸ் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: நியூஸிலாந்தை சாய்த்து 78 வருட சாதனையை உடைத்த நேதன் லயன்.. அஸ்வினை விட எங்கேயோ போய்ட்டு இருக்காரு

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரையும் அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியா தக்க வைத்து அசத்தியது. அப்படிப்பட்ட அவர் 128 போட்டிகளில் 527 விக்கெட்களை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நேதன் லயன் ஓய்வு பெறும் போது கேப்டன்ஷிப் பதவியை விட்டு விடுவேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Advertisement