நியூஸிலாந்தை சாய்த்து 78 வருட சாதனையை உடைத்த நேதன் லயன்.. அஸ்வினை விட எங்கேயோ போய்ட்டு இருக்காரு

nathan lyon
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. அதனால் 1993க்குப்பின் நியூஸிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக்கொண்ட ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேதன் லயன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அவர் மற்ற ஆஸ்திரேலியா வீரர்களை விட அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்தார். அத்துடன் 2வது இன்னிங்சில் பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய அவர் 27 ஓவரில் 65 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்து நியூசிலாந்தை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

மேலே போகும் லயன்:
குறிப்பாக 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த அவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் என்ற 78 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. நேதன் லயன் : 6/65, வெலிங்டன், 2024*
2. வில்லியம் ஜோசப் ஓ’ரெலி : 5/14, வெலிங்டன், 1946
3. ஷேன் வார்னே : 5/39, கிறிஸ்ட்சர்ச், 2005

அத்துடன் ஆஸ்திரேலியா இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் 9 வெவ்வேறு நாடுகளில் அவர் குறைந்தபட்சம் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நாடுகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் சமன் செய்தார்.

- Advertisement -

இதற்கு முன் இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோரும் அதிகபட்சமாக தலா 9 வெவ்வேறு நாடுகளில் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளனர். அந்த வகையில் நியூசிலாந்தை இப்போட்டியில் தோற்கடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற நேதன் லயன் இதுவரை 128 போட்டிகளில் 527 விக்கெட்டுகளை எடுத்து நவீன கிரிக்கெட்டில் மகத்தான ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: 13 ஃபோர்ஸ் 4 சிக்ஸ் 109 ரன்ஸ்.. தமிழ்நாடு அணியின் கனவை நொறுக்கிய தாக்கூர்? ரசிகர்கள் கவலை

மறுபுறம் அவர் அறிமுகமான அதே 2011ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அஸ்வின் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாததால் இப்போது தான் 99 போட்டிகளில் 507 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் கோர்ட்னி வால்ஷை முந்தியுள்ள நேத்தன் லயன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில் அஸ்வின் 9வது இடத்தில் இருக்கிறார். மேலும் அஸ்வினை விட ஒரு வயது குறைவாக இருப்பதால் கடைசியில் நேதன் லயன் அதிக விக்கெட்களுடன் கேரியரை முடிப்பதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement