13 ஃபோர்ஸ் 4 சிக்ஸ் 109 ரன்ஸ்.. தமிழ்நாடு அணியின் கனவை நொறுக்கிய தாக்கூர்? ரசிகர்கள் கவலை

Shardul Thakur
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்றில் வெற்றி கண்ட தமிழ்நாடு அணி 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக செமி ஃபைனலுக்கு பெற்றது. அதைத் தொடர்ந்து மார்ச் இரண்டாம் தேதி மகாராஷ்டிராவில் துவங்கிய அரையிறுதி போட்டியில் வலுவான மும்பையை சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு சுமாராக செயல்பட்டு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக வாசிங்டன் சுந்தர் 43, விஜய் சங்கர் 44 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 5, பூபேன் லால்வாணி 15, அவஸ்தி 2, கேப்டன் ரகானே 19, ஸ்ரேயாஸ் ஐயர் 3 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி தமிழ்நாடு பவுலர்கள் அழுத்தத்தை கொடுத்தனர்.

- Advertisement -

கடுப்பேற்றிய தாக்கூர்:
அதே போல மறுபுறம் அரை சதமடித்து 54 ரன்கள் குவித்து சவாலை கொடுத்த இளம் வீரர் முஷீர் கானை சரியான நேரத்தில் அவுட்டாக்கிய கேப்டன் சாய் கிஷோர் அடுத்து வந்த சம்ஸ் முலானியை டக் அவுட்டாக்கினார். அதனால் 106/7 என தடுமாறிய மும்பையை விரைவில் ஆல் அவுட் செய்து தமிழ்நாடு முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது வந்த நட்சத்திர வீரர் சர்துல் தாகூர் தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். குறிப்பாக விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோருடன் சேர்ந்த அவர் 8வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மும்பையை சரிவிலிருந்து முழுமையாக காப்பாற்றினார். அப்போது ஹர்திக் தாமோரை 35 ரன்கள் சாய் கிஷோர் அவுட்டாக்க்கினார்.

- Advertisement -

ஆனாலும் எதிர்புறம் அவுட்டாகாமல் அடம் பிடித்த சர்துள் தாகூர் அடுத்ததாக வந்த தனுஷ் கோட்டியனுடன் சேர்ந்து அரை சதமடித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து 13 பவுண்டரி 4 சிக்சருடன் 109 (105) ரன்கள் விளாசி மும்பையை 300 ரன்கள் தாண்ட வைத்து தமிழகத்தின் கனவை உடைத்து அவுட்டானார்.

இதையும் படிங்க: டேய் லார்டு.. போதும் டா.. இதோட நிறுத்திக்கோ ஷர்துல் தாகூரை கண்டித்து – ரவிச்சந்திரன் அஷ்வின் போட்ட பதிவு

ஏனெனில் அவருடன் சேர்ந்து விளையாடிய தனுஷ் கோட்டியான் தன்னுடைய பங்கிற்கு அரை சதமடித்து 74* ரன்கள் எடுத்ததால் 2வது நாள் முடிவில் 353/9 ரன்கள் எடுத்துள்ள மும்பை 207 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் கடைசியில் சொதப்பிய தமிழ்நாடு அணி சார்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 6* விக்கெட்டுகள் எடுத்தும் மும்பையை இன்னும் ஆல் அவுட் செய்ய முடியாததால் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த வகையில் தன்னுடைய முதல் சதமடித்து பின்னடவை ஏற்படுத்திய தாக்கூர் மீது எங்களுக்குன்னே வருவீங்களா? என்று தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement