டேய் லார்டு.. போதும் டா.. இதோட நிறுத்திக்கோ ஷர்துல் தாகூரை கண்டித்து – ரவிச்சந்திரன் அஷ்வின் போட்ட பதிவு

Shardul-and-Ashwin
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை மாநில அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி நேற்று மார்ச் 22-ஆம் தேதி துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தமிழக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 146 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் மும்பை அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

குறிப்பாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று இதுவரை 290 ரன்களுக்கு மேல் குவித்து தமிழக அணியை விட 150 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தமிழக அணி 146 ரன்களில் சுருண்டதற்கு மிக முக்கியமான காரணமாக ஷர்துல் தாகூர் திகழ்ந்தார்.

ஏனெனில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பந்துவீசிய அவர் 14 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகிய நட்சத்திர வீரர்களை ஆட்டமிழக்க வைத்தார்.

- Advertisement -

அதோடு பேட்டிங்கிலும் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷர்துல் தாகூர் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதனை கவனித்த இந்திய அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் “டே லார்டு, போதுண்டா” என்று அழுதபடி சிரிக்கும் இமேஜ்ஜிக்களை வெளியிட்டு செல்லமாக அவரை கண்டித்து தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகிலேயே இப்படி ஒரு ரிட்டையர்மென்டை பாத்ததில்லை.. டிம் சௌதீ’யின் அறிவிப்பை கலாய்த்த பட் கமின்ஸ்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷர்துல் தாகூர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் தற்போது ரஞ்சி போட்டியில் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement