உலகிலேயே இப்படி ஒரு ரிட்டையர்மென்டை பாத்ததில்லை.. டிம் சௌதீ’யின் அறிவிப்பை கலாய்த்த பட் கமின்ஸ்

Pat Cummins 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து 172 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோற்ற நியூசிலாந்து இந்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை இந்தியாவிடம் பறி கொடுத்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வேக்னர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் 37 வயதாகும் அவர் தொடர் துவங்குவதற்கு சில நாட்கள் முன்பாக திடீரென கண்ணீர் மல்க ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழி விடுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கலாய்த்த கமின்ஸ்:
ஆனால் ஓய்வுக்குப் பின்பும் வெலிங்டன் நகரில் நடந்த முதல் போட்டியில் அவ்வப்போது சப்ஸ்டிடியூட் வீரராக செயல்பட்ட அவர் சக வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது, உபகரணங்களை எடுத்துச் சென்று வழங்குவது போன்ற உதவிகளை செய்தார். அந்த வகையில் ஓய்வுக்கு பின் நேராக வீட்டுக்கு செல்லாமல் நியூசிலாந்து அணியுடன் முதல் போட்டியில் இருந்த அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் நெய்ல் வேக்னரை விளையாட வைப்பதற்கான திட்டத்தை வைத்துள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ அறிவித்துள்ளார். குறிப்பாக முதல் போட்டியில் விளையாடிய இளம் வீரர் வில்லியம் ஓரௌர்க்கே 8 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

எனவே 2வது போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதால் வேக்னரை களமிறக்க முடிவெடுத்துள்ளதாக டிம் சவுதி மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “களத்தில் அவ்வப்போது ஃபீல்டிங் செய்த வேக்னருக்கு கடந்த வாரம் இங்கே ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு இருந்தது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அவரையும் அடுத்த போட்டியில் ஒரு ஆப்ஷனாக வைத்துள்ளோம்” என்று கூறினார். அவருடைய இந்த அறிவிப்பு பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கலாய்க்கும் வகையில் பேசியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: கில், விராட் கோலி இல்ல.. இம்முறை ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது அவங்க தான்.. சஹால் கணிப்பு

“இது உலகிலேயே மிகவும் குறுகிய ரிட்டயர்மெண்ட். இருப்பினும் உங்களுடைய சிறந்த பவுலராக இருக்கும் அவர் நன்றாக செயல்படுவார் என்று நீங்கள் விரும்பினால் ஏன் அதை செய்யக்கூடாது? நானும் அவரை இதற்கு முன் எதிர்கொண்டுள்ளேன். உயர்ந்த எனர்ஜியை கொண்டுள்ள அவரிடம் முதல் போட்டியின் காலை நேரங்களில் பேசினேன்” என்று கூறினார். இதை தொடர்ந்து 64 போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகள் எடுத்த அனுபவம் கொண்ட வேக்னர் மீண்டும் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நியூசிலாந்து ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement