விராட் கோலி போல் பாபர் அசாமை கொண்டாட நாங்க ஒன்னும் இந்தியர்கள் அல்ல – குத்தி காட்டும் ரமீஸ் ராஜா

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு உலகின் டாப் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கும் நிலையில் 2009க்குப்பின் சாம்பியன் பட்டம் வெல்ல பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இருப்பினும் கடந்த உலக கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்து அரையிறுதி வரை சென்று தோற்ற அந்த அணி அதன்பின் கடந்த ஒரு வருடமாக தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனல் வரை சென்றாலும் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இளம் இலங்கையிடம் தோற்றது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடுப்பாக வைத்தது.

- Advertisement -

அந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆரம்பம் முதலே தடுமாறிய அந்த அணி 4 – 3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது. பொதுவாகவே தரமான பந்து வீச்சை கொண்டிருக்கும் அணியாக கருதப்படும் பாகிஸ்தான் இந்த தொடரில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை பரிசளித்தது. அத்துடன் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை பலவீனமாக இருப்பதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

சந்தடி சாக்கில்:
மேலும் முழுவதுமாக டாப் ஆர்டரை மட்டும் சார்ந்திருக்கும் அந்த அணியின் தூண்களாக கருதப்படும் உலகின் நம்பர்-1 டி20 பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தடுமாறுவதும் அப்படியே குவித்தாலும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை எடுக்க தவறுவதும் இந்த தோல்விகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலைமையில் நியூசிலாந்து பயணித்துள்ள பாகிஸ்தான் உலக கோப்பைக்கு முன்பாக அங்கு முத்தரப்பு டி20 தொடரில் களமிறங்குகிறது.

Babar-Azam-and-Virat-Kohli

இந்நிலையில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் சதமடித்த போது ஆசிய கோப்பை பைனலுக்கு இந்தியா செல்லாததை மறந்த இந்திய ரசிகர்கள் அவருடைய சதத்தை கொண்டாடியதாக பாகிஸ்தான் வாரியத் தலைவர் ரமீஷ் ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் அதுவே தங்களுடைய பாபர் அசாம் அதுபோல் சதமடித்தால் அதை கொண்டாடாமல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் சதமடித்ததையும் பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவாததையும் விமர்சிப்போம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது தனிநபர் சதத்தை விட நாட்டின் வெற்றியே முக்கியம் என்று தெரிவிக்கும் அவர் நாங்களாக இருந்தால் இந்தியர்களை போல் அல்லாமல் பாகிஸ்தானின் வெற்றிக்கு உதவாமல் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் சதமடித்தாலும் பாபர் அசாமை விமர்சிப்போம் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நாங்கள் பைனலுக்கு (ஆசிய கோப்பை) சென்றோம், ஆம் நாங்கள் ஃபைனலில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அப்படி ஒரு மோசமான நாள் அமைந்தது பரவாயில்லை. அதே சமயம் ஆசிய கோப்பையில் எங்களை விட சுமாராக செயல்பட்டு அணிகளும் இருந்தன. அதாவது ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாததற்காக இந்திய அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய ரசிகர்களும் ஊடகங்களும் அதை செய்யவில்லை”

Ramiz-raja

“இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதாவது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதமடித்த போது ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களது அணி ஆசிய கோப்பை பைனலுக்கு செல்லாததை மறந்து விட்டது. அதை நாங்கள் செய்வோமா? அதுவே நாங்களாக இருந்தால் பாபர் அசாம் சதமடித்தார் ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 135 தான், டேவிட் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட் 147.3 என்று கூறுவோம். எனவே அது பயனற்றது” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல்-ன் போது பெங்களூருக்கு நேரில் வந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பேன் – ஏ.பி.டி வில்லியர்ஸ் உருக்கம்

மேலும் ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியாவை விட தங்களது அணி இப்போதும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் ஆசிய கோப்பை பைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்காக பாகிஸ்தான் அணியை விமர்சிப்பது தேவையற்றது என்று விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement