- Advertisement -
தொழில்நுட்பம்

Whatsapp : வாட்ஸ்ஆப் குரூப்பில் வரப்போகிறது அசத்தலான அப்டேட் – இனி பிரச்சனையே இல்லை

சமூக வலயத்தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது வாட்ஸ்ஆப். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை இன்று வாட்ஸ்ஆப்பில் இனைந்து தகவல்களை பரிமாறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பலரும் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என பலரை ஒன்றாக இணைத்து ஒரு குழுவை ஆரமித்து அதில் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். ஆனாலும் அந்த குழுக்கள் மூலம் சில பிரச்சனைகளும் உண்டு. அதை தவிர்ப்பதற்கான யுக்தியில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சிலர் வாட்ஸ்ஆப்பில் எண்ணற்ற குழுக்களில் இணைந்திருப்பதால் அவர்களுக்கு ஏராளாமான தகவல்கள் வரக்கூடும். சில நேரம் முக்கிய வேலைகளின் போது தேவையற்ற தகவல்கள் குழுக்களில் வந்து நம்மை தொந்தரவு செய்யவும் வாய்ப்புள்ளது. இது போன்ற தொந்தரவில் இருந்து தப்பிக்க “வெக்கேஷன் மோட்” என்ற ஒரு புது வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த உள்ளது.

- Advertisement -

ஒருவர் எந்த குரூப்பில் உள்ள தகவல்கள் தங்களை தொந்தரவு செய்கிறது என்று எண்ணுகிறாரோ அந்த குரூப்பை வெக்கேஷன் மோடில் போட்டுவிட்டால். அந்த குரூப்பில் இருந்து வரும் எந்த விதமான தகவல்களும் அவருக்கு நோட்டிபிகேஷனில் வராது. அதோடு அந்த தகவல்களும் அவருக்கு புதிய மெசேஜில் காட்டாது.

அதே போல நமக்கு எந்த விதமான தகவலும் யாரிடம் இருந்தும் சில காலம் வரக்கூடாது. அதேவேளையில் நாம் வாட்ஸ்ஆப்பில் இணைத்திருக்கவும் வேண்டும் என்று யாரேனும் நினைத்தால் அதையும் சாத்தியப்படுத்த உள்ளது இந்த வெக்கேஷன் மோட்.

- Advertisement -

டாகில் ஆப்ஷன் மூலம் ஒருவர் வெக்கேஷன் மோடை இதில் ஆப் மற்றும் ஆன் செய்ய இயலும். கடந்து ஆண்டு முதல் இந்தனை சோதித்து வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

தற்சமயம் வெக்கேஷன் மோட் பீட்டா டெஸ்டிங்கில் உள்ளது. இன்னும் சில அப்டேட்களில் வெக்கேஷன் மோட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனிகளில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -
Published by