கடைசியா கட்டாக் மைதானத்தில் இந்திய அணி விளையாடிய போது என்ன நடந்தது தெரியுமா? – தோனி சந்தித்த அவலம்

Dhoni-cuttack
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது டி20 போட்டியானது இன்று இரவு ஏழு மணிக்கு கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி ஏற்கனவே கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய போது ஏற்பட்ட நிகழ்வு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடியபோது தோனி தலைமையிலான இந்திய அணி சந்தித்த அவலம் பற்றியும் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு விரிவான தகவலை தொகுத்து வழங்கியுள்ளோம்.

mohit

- Advertisement -

அதன்படி கடந்த முறை இதே கட்டாக் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இந்தியாவின் மோசமான செயல்பாடு காரணமாக மைதானத்திற்குள் வாட்டர் பாட்டில்களை தூக்கி எறிந்ததால் அதனால் மைதானத்தில் பெரிய பதட்டம் ஏற்பட்டு போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இதே கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியின்போது டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அப்போது தோனி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 92 ரன்கள் என்கிற மிகக்குறைந்த ஸ்கோரே அடித்து ஆல் அவுட் ஆனது.

cuttack 1

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அனைவரும் இரண்டாம்பாதி ஆட்டத்தின் போது மைதானத்திற்குள் வாட்டர் பாட்டிலை தூக்கி வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இந்திய அணியின் மோசமான செயல்பட்டால் கோபமடைந்த ரசிகர்கள் இதுபோன்ற மோசமான அமர்க்களத்தில் அப்போது ஈடுபட்டனர். ரசிகர்கள் அனைவரும் வீசிய இந்த பாட்டில்கள் அனைத்தும் கிரவுண்டுக்குள் விழவில்லை என்றாலும் பவுண்டரி லைனில் சுற்றி இருந்தன. அதோடு கூச்சலும் அதிகளவில் இருந்ததால் போட்டி நடைபெறுவதில் தடை ஏற்பட்டது.

- Advertisement -

அதனால் அந்தப் போட்டியின் போது பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மைதானத்தில் இறங்கி சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னரே போட்டி நடைபெற்றது. அந்த அளவிற்கு ரசிகர்களிடமிருந்து மோசமான செயல் கடந்த முறை இந்தியா விளையாடிய போது அங்கு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : மைதானத்தில் வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிர்வாகம் – என்னென்ன கண்டிஷன்

கட்டாக் மைதானத்தில் கடைசியாக தோனியின் தலைமையிலான இந்திய அணி ரசிகர்களின் மோசமான செயலால் அவமானத்தையும் சந்தித்திருந்தது. இந்நிலையில் அதே மைதானத்தில் தற்போது போட்டி நடைபெற உள்ளதால் இந்த தகவல் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement