IND vs RSA : மைதானத்தில் வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிர்வாகம் – என்னென்ன கண்டிஷன்

Fans
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு உள்ளது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற தென்ஆப்பிரிக்க அணி கடுமையாக போராடும் என்பதனால் இந்த போட்டியை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் கட்டாக் மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மழை பெய்தாலும் போட்டி பாதிக்காத அளவிற்கு நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மைதானம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் அம்மாநில கிரிக்கெட் நிர்வாகம் விதித்துள்ளது.

RIshabh Pant Fans

அந்த வகையில் எந்தெந்த விதிமுறைகளை அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். அதன்படி இன்றைய போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போட்டிக்கான டிக்கெட்டிலும் “நோ மாஸ்க் நோ என்ட்ரி” என்கிற வார்த்தைகள் தெளிவாக எழுதப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று ரசிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இருக்கைகளை தவிர்த்து வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும் அத்துமீறி மைதானத்திற்குள் நுழையவோ அல்லது வேறு எங்காவது உலாவுவதோ கூடாது என்றும் அப்படி ஏதேனும் விதிமீறல் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட ரசிகர்கள் மைதான பாதுகாவலர்களும் மூலமாக வெளியேற்றப்படும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை வீரர் – நம்ப முடியாத உலக சாதனையுடன் மாஸ் வெற்றி

மேலும் மைதானத்திற்குள் நுழையும் ரசிகர்கள் முழு பாதுகாப்பு பரிசோதனைக்குப் பிறகு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பார்வையாளர்கள் யாரும் கத்தி போன்ற எந்த ஒரு பொருட்களையும் கொண்டு வரக்கூடாது என்று அம்மாநில காவல்துறை தெளிவாக ரசிகர்களுக்கு முன்னெச்சரிக்கை ஒன்றிணையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement