நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஏற்பட்ட அவமானம் – யாருமே இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

Eng
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. அதை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

wivseng

- Advertisement -

நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் இம்முறை பலமான அணியாக உள்ளதாலும் பெருமளவு அணியில் பவர்ட் ஹிட்டர்கள் இருப்பதாலும் மிகப்பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் அபார பந்து வீசியதன் காரணமாக எந்த ஒரு வீரரும் 20 ரன்களை கூட அடிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

குறிப்பாக துவக்க வீரர்கள் சிம்மன்ஸ், லீவிஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் அடுத்து வந்த பிராவோ, பொல்லார்ட், ஹெட்மையர், பூரான், ரசல் ஆகிய அனைவரும் ஒற்றை இலக்குடன் நடையை கட்டினர். இதன் காரணமாக 14.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது அதிகபட்சமாக கெயில் 13 ரன்கள் குவித்தார். ஆட்டம் ஆரம்பிக்கும் போது இவ்வளவு பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி ஒரு சறுக்கலை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ali

அப்படி ஒரு மோசமான ஆட்டத்தை இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணி சார்பில் அதில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளையும், மொயின் அலி, மில்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் விக்கெட்டுகளை 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : கட்டத்துக்குள்ளே உக்காருங்க. யாரும் வெளிய வரக்கூடாது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த – புது செட்டப்

ஏற்கனவே இரண்டு முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி நிச்சயம் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி பயிற்சி போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement