கட்டத்துக்குள்ளே உக்காருங்க. யாரும் வெளிய வரக்கூடாது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த – புது செட்டப்

Abu-dhabi
- Advertisement -

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இன்று துவங்கியது. இந்த சுற்றின் முதல் போட்டியாக பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 118 ரன்களை மட்டுமே அடித்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் துல்லியமான பந்து வீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்க அணி எந்த ஒரு கட்டத்திலும் ரன் குவிக்க முடியாமல் திணறியது.

bavuma

அதிகபட்சமாக மார்க்ரம் 40 ரன்கள் அடிக்க அவரை தவிர வேறு எந்த வீரரும் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் ஆப்பிரிக்க அணி 118 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தட்டுத்தடுமாறி ஒருவழியாக இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த உலக கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியின்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு விடயம் மைதானத்தில் தென்பட்டது. அந்த விடயம் யாதெனில் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்படாமல் இருந்த காலம் போய் தற்போது மெல்ல மெல்ல ரசிகர்கள் மைதானத்துக்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

fans

அந்த வகையில் மைதானத்திற்குள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது அபுதாபி மைதானத்தின் காலி இடங்களில் சிறு சிறு கட்டங்கள் போன்று வேலி அமைக்கப்பட்டு இருக்கைகள் இருந்தன. ஒருகட்டத்தில் 4 ரசிகர்கள் அமரலாம் என்ற விதிமுறைப்படி சிறுசிறு வேலிகளை அமைத்து ரசிகர்களை அமரவைத்து இருந்தனர். அபுதாபி மைதானத்தின் இந்த புதிய செட்டப் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : தான் விளையாடிய அணி தோல்வியடைந்தால் விரக்தியில் ஓய்வை அறிவித்த சீனியர் வீரர் – ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் எங்கும் நகர்ந்து செல்ல கூடாது என்பதற்காகவோ அல்லது குழந்தைகள் வேறு எங்கும் செல்லக்கூடாது என்பதற்காகவோ இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் பார்ப்பதற்கு அருமையாக இருந்த இந்த விடயம் தற்போது இணையத்தில் புகைப்படமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement