தான் விளையாடிய அணி தோல்வியடைந்தால் விரக்தியில் ஓய்வை அறிவித்த சீனியர் வீரர் – ரசிகர்கள் வருத்தம்

Doeschate
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரானது கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அந்த தகுதிச்சுற்றில் தேர்ச்சி அடைந்த 4 அணிகள் தற்போது சூப்பர் 12 சுற்றுக்கு நுழைந்துள்ளனர். அப்படி விளையாடிய அணிகளில் நெதர்லாந்து மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து சூப்பர் 12- சுற்றில் விளையாடும் வாய்ப்பை தவற விட்டது.

doeschate 2

- Advertisement -

இதன் காரணமாக அந்த அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இன்று முதல் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியின் அடுத்தடுத்து தோல்வியால் வருத்தமடைந்த அந்த அணியின் சீனியர் ஆல்ரவுண்டரான ரியான் டென் டெஸ்காத்தே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

41 வயதான ரியான் டென் டெஸ்காத்தே தென் ஆப்பிரிக்கா 2006 ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 33 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1541 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 533 ரன்களை குவித்துள்ளார்.

doeschate 1

அதோடு ஐபிஎல் தொடரிலும் 29 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணியில் இடம் கிடைக்காததை தொடர்ந்து அவர் நெதர்லாந்திற்கு குடிபெயர்ந்து அந்நாட்டு அணிக்காக கிரிக்கெட் விளையாடி வந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் : நாளைய போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட – கிரிக்கெட் நிர்வாகம்

இந்நிலையில் நெதர்லாந்து அணியும் இந்த டி20 தொடரில் இருந்து வெளியேற அவர் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2006 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி தற்போது ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement