- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : அதிரடி துவக்கத்தை பெற்ற வெ.இ – துல்லியமான பந்து வீச்சால் அடக்கிய இந்தியா, ட்ரிக்கான இலக்கை சேசிங் செய்யுமா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 (2) என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரையும் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றுடன் துவக்கியது. அதைத்தொடர்ந்து 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கியது.

அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அந்த நிலைமையில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்தியா சார்பில் முகேஷ் குமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் பேட்டிங்கை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரெண்டன் கிங் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு ரன் குவிப்பை துவங்கினார்.

- Advertisement -

அசத்தல் பவுலிங்:
இருப்பினும் மறுபுறம் தடுமாறிய கெய்ல் மேயர்ஸை 4வது ஓவரின் முதல் பந்திலேயே 1 (7) ரன்னில் அவுட்டாக்கிய சஹால் அடுத்த சில பந்துகளில் மறுபுறம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் மிரட்டலை கொடுத்த ப்ரண்டன் கிங்கையும் 28 (19) ரன்களில் காலி செய்தார். அந்த நிலைமையில் வந்த தடுமாறிய ஜான்சன் சார்லஸ் அடுத்த சில ஓவர்களிலேயே குல்தீப் யாதவ் சுழலில் 3 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 58/3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக கேப்டன் ரோவ்மன் போவல் – நிக்கோலஸ் பூரான் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக செயல்பட முயற்சித்தனர்.

அதில் போவல் விரைவாக ரன்களை சேர்த்த போதிலும் மறுபுறம் சற்று நிதானத்தை காட்டிய நிக்கோலாஸ் பூரான் நன்கு செட்டிலாகி 2 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (34) ரன்கள் குவித்திருந்த போது பாண்டியா வேகத்தில் 41 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்ததாக வந்த சிம்ரோன் ஹெட்மயரும் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார். மறுபுறம் இந்தியா சிறப்பாக பந்து வீசியதால் ரன் ரேட் குறைந்த அழுத்தத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட அவரை 19வது ஓவரில் 10 (12) ரன்களில் அவுடடாக்கிய அர்ஷிதீப் சிங் அடுத்த சில பந்துகளில் மறுபுறம் 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு சவாலை கொடுத்த கேப்டன் ரோவ்மன் போவலையும் 48 (32) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

இறுதியில் ஜேசன் ஹோல்டர் 6* (5) ரன்களும் ரொமாரியா செபார்ஃட் 4* (6) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 149/6 ரன்கள் மட்டுமே எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சஹால் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.அப்படி இந்த போட்டியில் ப்ரெண்டன் கிங் அதிரடியாக செயல்பட்டதால் முதல் 2 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை 4வது ஓவரிலிருந்து சீராக எடுத்த இந்தியா விரைவாக ரன்களை குவிக்க விடாமல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

அதனால் மிடில் ஆர்டரில் நல்ல ஃபார்மில் இருக்கும் நிக்கோலஸ் பூரான் முரட்டுத்தனமாக அடிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு ஆட்டமிழந்த நிலையில் ரோவ்மன் போவல் தவிர்த்து சிம்ரோன் ஹெட்மையர் போன்றவர்கள் அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு டெத் ஓவர்களில் இந்தியாவின் பவுலிங் அபாரமாக இருந்தது.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – கேப்டன் பாண்டியா அதிரடி

இருப்பினும் இப்போட்டி நடைபெறும் பிரைன் லாரா மைதானம் நேரம் செல்ல செல்ல மெதுவாக மாறும் என்பதால் இந்த இலக்கே வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு போராடும் அளவுக்கு போதுமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு இந்தியா போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -