IND vs WI : வெ.இ அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – கேப்டன் பாண்டியா அதிரடி

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று நடைபெற்று வரும் முதலாவது போட்டியுடன் கோலாகலமாக துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது இந்த டி20 தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று ஆகஸ்ட் 3-ஆம் டிரினிடாட் நகரில் உள்ள மைதானத்தில் சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதன்படி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? எந்த வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இவ்வேளையில் இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் அறிமுகமாவதாக கேப்டன் பாண்டியா உறுதி செய்தார். அதன்படி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மாவும், வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் ஆகிய இருவரும் இந்த போட்டியில் அறிமுகம் ஆகியுள்ளனர்.

- Advertisement -

அதே வேளையில் டெஸ்ட் போட்டியில் அறிமுக வாய்ப்பை பெற்று விளையாடியிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs WI : இன்றைய முதல் வெ.இ டி20 போட்டியில் பாகிஸ்தானின் உலக சாதனை செய்யப்போகும் இந்தியா – விவரம் இதோ

1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் பட்டேல், 8) குல்தீப் யாதவ், 9) யுஸ்வேந்திர சாஹல், 10) அர்ஷ்தீப் சிங், 11) முகேஷ் குமார்.

Advertisement