IND vs WI : இன்றைய முதல் வெ.இ டி20 போட்டியில் பாகிஸ்தானின் உலக சாதனை செய்யப்போகும் இந்தியா – விவரம் இதோ

IND vs PAk
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0* (2) என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா 2006க்குப்பின் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக17வது வருடமாக 13வது முறையாக ஒரு தொடரை வென்று சாதனை படைத்தது.

குறிப்பாக முதல் போட்டியில் வென்ற தங்களை 2வது போட்டியில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே 3வது போட்டியில் இளம் வீரர்களுடன் தோற்கடித்த இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று சாதனைகளையும் படைத்தது. இதைத்தொடர்ந்து 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதிலும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முழுவதுமாக இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

உலக சாதனை சமன்:
குறிப்பாக யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் போன்ற ஐபிஎல் 2023 தொடரில் அசத்திய இளம் வீரர்கள் முதல் முறையாக இத்தொடரில் அறிமுகமாகும் நிலையில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அர்ஷிதீப் சிங், இஷான் கிசான், சுப்மன் கில், அக்சர் படேல் போன்ற தரமான வீரர்களும் இந்திய அணியில் இருக்கின்றனர். அதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களைப் போலவே இந்த டி20 தொடரிலும் வென்று இந்தியா கோப்பையுடன் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ட்ரினிடாட் நகரில் துவங்குகிறது.

அதில் தன்னுடைய 200வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடும் அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனை சமன் செய்ய உள்ளது. கடந்த 2006 டிசம்பர் 1ஆம் தேதி தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பர்க் நகரில் முதல் முறையாக தன்னுடைய டி20 போட்டியை விளையாடிய இந்தியா 2007 டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வகையில் 16 வருடங்களில் இதுவரை 199 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 127 வெற்றிகளையும் 63 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

6 போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் டையில் முடிந்த 3 போட்டிகளில் சூப்பர் ஓவர் வாயிலாகவும் இந்தியா வென்றுள்ளது. மறுபுறம் 2009 டி20 உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் இதுவரை 223 போட்டிகளில் 134 வெற்றிகளையும் 80 தோல்விகளையும் பதிவு செய்து உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் விளையாடிய அணியாக சாதனை படைத்துள்ளது.

அந்த விரிவான பட்டியல் இதோ:
1. பாகிஸ்தான் : 223 (134 வெற்றிகள்)
2. இந்தியா : 199 (127 வெற்றிகள்)
3. நியூஸிலாந்து : 193 (98 வெற்றிகள்)
4. இலங்கை : 179 (79 வெற்றிகள்)
5. வெஸ்ட் இண்டீஸ் : 179 (73 வெற்றிகள்)
6. ஆஸ்திரேலியா : 174 (91 வெற்றிகள்)
7. இங்கிலாந்து : 173 (90 வெற்றிகள்)
8. தென்னாப்பிரிக்கா : 168 (95 வெற்றிகள்)
9. வங்கதேசம் : 152 (56 வெற்றிகள்)
10. அயர்லாந்து : 152 (64 வெற்றிகள்)

இதையும் படிங்க:நீங்க ராஞ்சியில் இருந்து வந்திருக்கலாம். ஆனா நீங்க தோனி இல்ல. கிண்டல் செய்த ஆகாஷ் சோப்ராவிற்கு இஷான் கிஷன் பதிலடி

அப்படி சாதனை படைக்க காத்திருக்கும் இந்தியாவை தங்களுக்கு மிகவும் பிடித்த டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் தயாராகியுள்ளது. குறிப்பாக ரோவ்மன் போவல் தலைமையில் நிக்கோலஸ் பூரான், ஹெட்மயர், ப்ரெண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ் போன்ற அதிரடியான வீரர்கள் அந்த அணியில் விளையாடுவது இந்திய ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement