நீங்க ராஞ்சியில் இருந்து வந்திருக்கலாம். ஆனா நீங்க தோனி இல்ல. கிண்டல் செய்த ஆகாஷ் சோப்ராவிற்கு இஷான் கிஷன் பதிலடி

Chopra-and-Ishan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 200 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 64 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 77 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன்காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த இஷான் கிஷன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேனான ஜேசன் ஹோல்டரை ஸ்டம்பிங் செய்ய முயன்று அப்பீல் செய்தார். அந்த முடிவானது 3 ஆவது அம்பயரிடமும் சென்றது.

ஆனாலும் ஹோல்டரின் கால் தரையிலேயே இருந்ததால் மூன்றாவது அம்பயர் இதற்கு நாட் அவுட் என்று அறிவித்திருந்தார். இந்த நிகழ்வை வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இஷான் கிஷன் ஸ்டம்பிங் செய்வதை பார்த்துவிட்டு :

- Advertisement -

இதுபோன்ற ஸ்டம்பிங்கை பார்ப்பது அரிதான ஒன்று. பேட்ஸ்மேனின் கால் தரையில் தான் இருக்கிறது. நீங்கள் ராஞ்சியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் உங்களது பெயர் தோனி இல்லை என்று கிண்டலாக பதில் அளித்தார்.

இதையும் படிங்க : அவர் மட்டும் ஃபிட்டாகி விளையாடலைனா 2023 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்வி கன்ஃபார்ம் – முகமது கைப் கவலை

அதனை ஸ்டம்ப் அருகில் இருந்த மைக் மூலம் கேட்ட இஷான் கிஷன் : “அப்படி என்றால் சரிதான்” என ஆகாஷ் சோப்ராவின் அந்த கருத்திற்கு பதிலடி கொடுத்தார். இதனை கவனித்த ஆகாஷ் சோப்ராவும் “ஹவ் ஸ்வீட் இஷான்”, “வீ லவ் யூ” எனக் கூறினார் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement