25 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கெதிராக சாதனை நிகழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் – விவரம் இதோ

WI-vs-ENG
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என 2 பெரும் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதன்படி நடைபெற்ற இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் காரணமாக இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என கணக்கில் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்திருந்தது.

- Advertisement -

அப்போது மழை குறிக்கிடவே அதன் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு ரன்களும் குறைக்கப்பட்டது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 34 ஓவர்களில் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதல் ஏழு ஓவர்கள் பவர்பிளே என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இலக்கை துரத்தி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 31.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க : எந்த கேரண்டியும் கொடுக்க முடியாது.. ரோஹித் சர்மா பற்றிய கேள்விக்கு.. ஜெய் ஷா அதிரடி கருத்து

அவர்கள் பெற்ற இந்த வெற்றியின் மூலம் 25 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர். அந்த வகையில் கடந்த 1998-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கடைசியாக கைப்பற்றி இருந்தது. அதன்பிறகு இந்த 20-ஆம் நூற்றாண்டில் தற்போது தான் முதல் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement