எந்த கேரண்டியும் கொடுக்க முடியாது.. ரோஹித் சர்மா பற்றிய கேள்விக்கு.. ஜெய் ஷா அதிரடி கருத்து

Jay shah
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இருப்பினும் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுடைய நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களின் சுமாரான செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

கேரண்டி இல்ல:
எனவே காலம் கடந்த சீனியர் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்குவதற்கான வேலையை பிசிசிஐ கடந்த வருடமே கையிலெடுத்தது. அதற்கேற்றார் போல் கடந்த 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மேற்கொண்டு இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருப்பது ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அந்த இருவரும் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்ற செய்திகளே சமீபத்தில் அதிகமாக வலம் வருகின்றன. அதிலும் குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 4 தொடர்களில் தோல்வியை சந்தித்ததால் ரோகித் சர்மா கேப்டனாக விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அதற்கேற்றார் போல் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவார் என்ற தெளிவான உத்தரவாதத்தை கொடுக்க முடியுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: மறுபடியும் சி.எஸ்.கே அணியில் விளையாட ஆசையா இருக்கு.. வெளிப்படையாக கூறிய – வெஸ்ட் இண்டீஸ் வீரர்

“இப்போது தெளிவு பெற வேண்டிய அவசியம் என்ன? டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன் நமக்கு ஐபிஎல் மற்றும் ஆப்கானிஸ்தான் எதிரான தொடர்கள் இருக்கிறது” என்று கூறினார். அதாவது ரோகித் சர்மா கண்டிப்பாக விளையாடுவார் என்று இப்போதே எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது என ஜெய் ஷா மறைமுகமாக கூறியுள்ளார். அதனால் அந்த குழப்பம் மீண்டும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement