கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் – எத்தனை நாள் குவாரன்டைன் தெரியுமா ?

- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உலகின் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வைரசின் தாக்கம் ஒரு சில நாடுகளில் படிப்படியாக குறைந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் ஓரளவிற்கு தாக்கம் குறைந்து இருந்தாலும் அந்த கிரிக்கெட் வாரியம் இழப்பீடுகளை சரிசெய்ய வெகு சீக்கிரமாக கிரிக்கெட் போட்டிகளை துவக்கியுள்ளது.

wivseng

- Advertisement -

இதற்கு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியம் ஒத்துழைப்பு தர அந்த அணி ஜூலை மாதம் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு இங்கிலாந்தில் தரையிறங்கியது.

ஒரு மாதகாலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். அதனைத் தொடர்ந்து ஜூலை எட்டாம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 16ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், 24ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.

wivseng 1

இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை என்றால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கிட்டத்தட்ட 3400 கோடி இழப்பீடு ஏற்படும். இவற்றையெல்லாம் தாண்டி இந்த டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள மாட்டோம் என்று மூன்று வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கீமோ பால், டேரன் பிராவோ, ஹெட்மையர் ஆகியோர் இங்கிலாந்து சென்று விளையாட மறுத்து விட்டனர். ஆனால் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்று விளையாட உள்ளனர்.

- Advertisement -

wi

டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விவரம்:-

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிளாக்வுட், பான்னெர், கிரேக் பிராத் வெயிட், புரூக்ஸ், கேம்ப்பெல், ராஸ்டன் சேஸ், கார்ன் வால், ஷானே டவுரிட்ஜ், செமர் ஹோல்டர், ஷகி ஹோப், அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச், யேமன் ரெய்பர்.

Advertisement