- Advertisement -
உலக கிரிக்கெட்

39க்கு ஆல் அவுட்.. உகாண்டாவை சிதைத்த வெஸ்ட் இண்டீஸ்.. பிரம்மாண்ட வெற்றியுடன் உலக சாதனை சமன்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் ஒன்பதாம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு கயானா நகரில் 18வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 173/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு பிரெண்டன் கிங் 13 ரன்களில் அவுட்டானாலும் ஜான்சன் சார்லஸ் நிதானமாக விளையாடி 44 (42) ரன்கள் எடுத்தார். அவருடன் நிக்கோலஸ் பூரான் 22 (17) கேப்டன் ரோவ்மன் போவல் 23 (18) ரூதர்போர்ட் 22 (16) ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

மெகா வெற்றி:
கடைசியில் ஆண்ட்ரே ரசல் 30* (17) ரன்கள் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். உகாண்டா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் மசாபா 2 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதைத் தொடர்ந்து 174 என்ற கடினமான இலக்கை துரத்திய உகாண்டா அணி ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் அற்புதமான பந்து வீச்சில் திண்டாட்டமாக பேட்டிங் செய்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.

அதனால் 12 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த உகாண்டா வெறும் 39 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு 10 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஜுமா மியாகி 13* ரன்கள் எடுத்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் எதிரணியை குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய அணி என்ற இலங்கையின் உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்தது.

- Advertisement -

இதற்கு முன் 2014 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை இலங்கை அணியும் 39 ரன்களுக்கு ஆல் அவுட் செய்திருந்தது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் டி20 உலகக் கோப்பையிலும் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வெஸ்ட் இண்டீஸ் இரட்டை சாதனையும் படைத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அகில் ஹொசைன் 4 ஓவரில் 11 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார்.

இதையும் படிங்க: 36 ரன்ஸ்.. 11 – 0.. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பதம் பார்த்த ஆஸ்திரேலியா.. 17 வருடங்கள் கழித்து அபார வெற்றி

அவருடன் அல்சாரி ஜோசப் 2, செபார்ட் 1, ஆண்ட்ரே ரசல் 1, குடகேஷ் மோட்டி 1 விக்கெட் எடுத்தனர். இதையும் சேர்த்து சொந்த மண்ணில் அடுத்தடுத்த 2 வெற்றிகளை பெற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தி வருகிறது. மறுபுறம் 39க்கு சுருண்ட உகாண்டா டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற நெதர்லாந்தின் மோசமான உலக சாதனையை சமன் செய்தது.

- Advertisement -