
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அக்டோபர் 13ஆம் தேதி தம்புலாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பதும் நிசாங்கா 11, குசால் மெண்டிஸ் 19, குசால் பெரேரா 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 58-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இலங்கைக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் அசலங்கா மற்றும் கமிண்டு மெண்டிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். 4வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் மெண்டிஸ் 51 (40) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் அஸலங்கா 9 பவுண்டரியுடன் 59 (35) ரன்கள் குவித்தார். இறுதியில் ராஜபக்சா 17, விக்கிரமசிங்கே 4*, தீக்சனா 4 ரன்கள் எடுத்த உதவியுடன் இலங்கை 20 ஓவரில் 179-7 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ரொமாரியா ஃசெபார்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 180 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் – எவின் லெவிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் இலங்கை பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்தனர். அதே வேகத்தில் விளையாடிய அந்த ஜோடி 9.1 ஓவரில் 55 பந்தில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை கொடுத்தது. அதில் பிரண்டன் கிங் 63 (33) ரன்களும் லெவிஸ் 50 (28) ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.
அடுத்து வந்த சாய் ஹோப் 6, ராஸ்டன் சேஸ் 19, கேப்டன் போவல் 13 ரன்களில் அவுட்டானார். இறுதியில் இலக்கு குறைவாக இருந்தடீஜேல் ரூதர்போர்ட் 14* (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 19.1 ஓவரிலேயே 180-5 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. குறிப்பாக கிங் – லெவிஸ் அமைத்த அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்றது.
இதையும் படிங்க: இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் விலகல் – நமக்கு நல்லது தான்
அதனால் இலங்கையை சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே தோற்கடித்த அந்த அணி 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பிரண்டன் கிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் இலங்கைக்கு அதிகபட்சமாக தீக்சனா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.