இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் விலகல் – நமக்கு நல்லது தான்

Green
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் விலகல் :

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் மும்முரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் கடந்த இருமுறை இந்திய அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் இந்திய அணியை பழி தீர்க்க காத்திருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான அந்த அணியில் இருந்து முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் அது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர இளம் ஆல்ரவுண்டராக திகழும் கேமரூன் கிரீன் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் வேகப்பந்து வீச்சிலும் கைகொடுக்க கூடியவர். இந்நிலையில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அடுத்த ஆறு மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஐசிசி மகளிர் டி20 உ.கோ: 3க்கு 3.. பாகிஸ்தான் கையில் இந்தியாவின் கனவு.. செமி ஃபைனலுக்கான வழி இதோ

இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அவரது விலகல் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement