ஜடேஜாவின் பிளஸ்ஸே அதுதான். ஆனா அதுவே போயிடுச்சி – கேப்டன்ஷிப் விலகல் குறித்து தோனி கூறியது என்ன?

Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. புனே நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 202/2 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கி ஹைதராபாத்தை புரட்டி எடுத்த ஓப்பனிங் ஜோடி ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

- Advertisement -

அதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த சென்ன ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்தனர். அப்போது 6 பவுண்டரி 6 சிக்சருடன் 99 (57) ரன்களில் அவுட்டான ருத்ராஜ் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு சென்ற நிலையில் அவருடன் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய டேவோன் கான்வே தனது பங்கிற்கு 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 85* (55) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார்.

கலக்கிய சென்னை:
அதை தொடர்ந்து 203 என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எவ்வளவோ போராடியும் 189/6 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. அந்த அணிக்கு கேன் வில்லியம்சன் 47 (37) அபிஷேக் சர்மா 39 (24) ஆகியோர் அதிரடியாக ரன்களை எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அதை வீணடிக்கும் வகையில் அடுத்து வந்த ராகுல் திரிபாதி 0 (1) ஐடன் மார்க்ரம் 17 (10) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்சருடன் 64* (33) ரன்கள் எடுத்து போராடினாலும் கை கொடுத்ததால் அந்த அணி பரிதாபமாக தோற்றது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகேஷ் சவுத்ரி 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

Mukesh Chowthry CSK

இதனால் 9 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் அதிர்ஷ்டத்தின் உதவியை எதிர்பார்த்து தொடர்ந்து நீடிக்கிறது. முன்னதாக இந்த போட்டிக்கு சென்னைக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்க வைத்த ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக திரும்பியது பெரும்பாலானவர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

ஜடேஜா விலகல் காரணம்:
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் தனது அபார கேப்டன்ஷிப் திறமையால் பெரும்பாலான வருடங்களில் சென்னையை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து வந்த எம்எஸ் தோனி போட்டிகள் அடிப்படையில் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற சாதனை படைத்தவர். ஆனால் 40 வயதை கடந்த காரணத்தால் வருங்காலத்தை கருதி கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவரின் கீழ் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டார்.

Ravindra Jaddeja MS Dhoni

ஆனாலும் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே 4 தோல்விகளுடன் வரலாற்றில் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாப சாதனை படைத்தார். அதைவிட கேப்டன்ஷிப் பொறுப்பேற்றதும் அவரின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அனைத்துமே சொதப்பிய காரணத்தால் மீண்டும் அந்தப் பொறுப்பைத் தோனியிடமே ஒப்படைத்துள்ளார்.

- Advertisement -

பீல்டரை இழக்க விரும்பல:
இந்நிலையில் ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை எம்எஸ் தோனி நேரடியாகவே நேற்றைய போட்டியின் முடிவில் தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக பொறுப்பேற்றதும் நீங்கள் உங்களது ஆட்டம் உட்பட நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதுள்ளது. அந்த வகையில் கேப்டன்ஷிப் பொறுப்பு அவரின் ஆட்டத்தை பாதித்ததாக நான் உணர்ந்தேன்”

jadeja

“அது அவரின் பேட்டிங்கில் ஒரு பாரத்தை போட்டது போல் அமைந்தது. எனவே நல்ல பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் அதைவிட சிறந்த பீல்டர் என்ற பரிணாமங்களை கொண்ட ஜடேஜாவை மட்டுமே நான் பார்க்க விரும்புகிறேன். அவர் கேப்டனாக இல்லை என்றாலும் கூட அவரின் வேலையை சிறப்பாக செய்தால் அதுவே மிகப்பெரிய பங்காகும். மேலும் கேப்டன்ஷிப் காரணமாக நாங்கள் ஒரு மிகச்சிறந்த பீல்டரை தவறவிட இருந்தோம். குறிப்பாக மிட் விக்கெட் திசையில் ஒரு நல்ல பீல்டர் இல்லாமல் 17 – 18 கேட்ச்களை தவற விட்டதில் அக்கறை காட்ட வேண்டியுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கேப்டன்ஷிப் பொறுப்பு பேட்டிங் மற்றும் பவுலிங் என்பதையும் தாண்டி உலகின் நம்பர்-1 பீல்டராக கருதப்படும் ஜடேஜாவின் பீல்டிங் திறமையையும் வெகுவாக பாதித்தது. குறிப்பாக மும்பைக்கு எதிரான போட்டியில் 2 எளிதான கேட்ச்களை அவர் கோட்டை விட்டதை பார்த்த ரசிகர்கள் “ஜடேஜாவா இது” என்று வாயடைத்துப் போனார்கள். மேலும் பொதுவாக பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்யும் ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்ற பின் பவுலர்களை தீர்மானிப்பதற்காக உள்வட்டத்தில் நின்று பீல்டிங் செய்தார்.

இதையும் படிங்க : என்ன தான் நாம ஜெயிச்சாலும் நீங்க பண்ணது தப்பு. 3 வீரர்களுக்கு தண்டனை வழங்கிய தல தோனி – விவரம் இதோ

அதன் காரணமாக அவர் இல்லாததால் பவுண்டரி எல்லையில் 17 – 18 கேட்ச்களை கோட்டைவிட்டது மிகப்பெரிய பின்னைடைவாக ஏற்படுத்தியதாக எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். எனவே ஜடேஜா போன்ற ஒரு அற்புதமான ஃபீல்டரை கேப்டன்ஷிப் பாரத்தை கொடுத்து இழக்க விரும்பவில்லை என்பதாலேயே அவர் திருப்பிக் கொடுத்த கேப்டன்சிப் பொறுப்பை தாமும் எந்தவித யோசனையும் இன்றி மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தோனி கூறியுள்ளார்.

Advertisement