என்ன தான் நாம ஜெயிச்சாலும் நீங்க பண்ணது தப்பு. 3 வீரர்களுக்கு தண்டனை வழங்கிய தல தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே அணியானது துவக்க வீரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே ஆகியோரது சிறப்பான அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 202 ரன்கள் என்ற பிரம்மாண்ட குவிப்பினை வழங்கியது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

- Advertisement -

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன் சேர்த்து தற்போது சிஎஸ்கே அணி தங்களது 3-வது வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பினை சிஎஸ்கே அணி உயிர்ப்புடன் வைத்துள்ளது என்று கூறலாம். இந்த போட்டியில் தோனி கேப்டனாக மீண்டும் திரும்பியதும் சிஎஸ்கே அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று இருந்தாலும் இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சிஎஸ்கே அணியானது மோசமான பீல்டிங் காரணமாக இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

mukesh

இந்த போட்டியில் பீல்டிங்கில் சொதப்பிய சிஎஸ்கே வீரர்கள் முக்கியமான கேட்சிகள் பலவற்றை எளிதாக தவற விட்டனர். குறிப்பாக முகேஷ் சவுத்ரி, தீக்ஷனா மற்றும் பிரிடோரியஸ் ஆகியோர் முக்கியமான கட்டங்களில் கேட்சை பிடிக்க தவறிவிட்டனர். இதன் காரணமாக அதிர்ப்தி அடைந்த தோனி போட்டி முடிந்த பிறகு பேசுகையில் அந்த மூவருக்கும் ஒரு வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் :

- Advertisement -

எளிதாக பிடிக்க வேண்டிய கேட்சை நீங்கள் தவற விடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. கேட்ச் விட்ட குற்றத்திற்காக உங்களது ஓய்வு நேரத்தில் ஒரு மணிநேரம் ரத்து செய்யப்படுகிறது. அந்த ஒருமணி நேரத்தில் தொடர்ந்து 150 கேட்ச்கள் வரை நீங்கள் பிடித்தாக வேண்டும். ஒருவேளை நூறு கேட்ச்களை பிடித்து ஒரு கேட்ச்யை தவற விட்டால் கூட மீண்டும் 150 கேட்ச்களை பிடிக்க வேண்டும் என்ற தண்டனையை அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் கச்சிதமாக அதிக கேட்ச்களை பிடித்த டாப் 7 தரமான பீல்டர்களின் பட்டியல் இதோ

அதே போன்று இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து இதே போன்ற தவறு நிகழ்ந்தால் நிச்சயம் உங்களது சம்பளப் பணத்திலிருந்து கூட பிடித்தம் செய்யவும் தயங்க மாட்டேன் என அதிரடியாக தோனி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement