ஐபிஎல் வரலாற்றில் கச்சிதமாக அதிக கேட்ச்களை பிடித்த டாப் 7 தரமான பீல்டர்களின் பட்டியல் இதோ

Raina
- Advertisement -

ஐபிஎல் போன்ற தொடரில் எப்போதுமே மைதானத்தின் நாலா புறங்களிலும் பரவியிருக்கும் பீல்டர்களுக்கு தண்ணி காட்டும் வகையில் பவுண்டரிகளை பறக்கவிடும் பேட்ஸ்மேன்கள் எப்படியாவது சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமூச்சுடன் பந்தை அடிப்பார்கள். அதில் பெரும்பாலான சமயங்களில் வெற்றி கண்டாலும் அனைத்து நேரங்களிலும் அது பவுண்டரி அல்லது சிக்ஸராக மாறாமல் மாறாக கேட்ச்சாக மாறிவிடும். அதுபோன்ற தருணங்களில் ஒரு பீல்டர் எவ்வித சொதப்பலுமின்றி பந்தை பிடித்தால் அதுவே வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமையும்.

Ambati rayudu Catch

- Advertisement -

ஒருவேளை கோட்டை விட்டால் அதுவே தோல்வியையும் பரிசளிக்கும். அதிலும் கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் கொடுத்த கேட்ச்சை கோட்டை விட்டால் அதன்பின் “ஏன்தான் கேட்சை விட்டோமோ” என்று 2 நாட்களுக்கு அந்த பீல்டர் தூங்காத அளவுக்கு சொல்லி சொல்லி அடித்து தோல்வியை பரிசளித்து விடுவார்கள். இந்த வருடம் கூட சென்னை போன்ற அணிகள் தொடர்ச்சியாக நிறைய கேட்ச்களை கோட்டை விட்டதால் அதோடு சேர்த்து கையிலிருந்த வெற்றியையும் எதிரணிக்கு பரிசளித்ததை பார்த்தோம்.

அந்த அளவுக்கு ஒரு கேட்ச் என்பது போட்டியின் தலையெழுத்தை தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக கிரிக்கெட்டில் கருதப்படுகிறது. அதன் காரணத்தினாலேயே ஆங்கிலத்தில் “கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்” என்று வல்லுநர்கள் குறிப்பிடுவார்கள். அதுவும் ஐபிஎல் போன்ற தொடர் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறுவதால் பனியின் தாக்கம் கண்டிப்பாக பந்தை ஈரமாக்கி கேட்ச்சை பிடிக்க பீல்டர்களுக்கு மேலும் சவாலை கொடுக்கும். இத்தனை தடைகளையும் தாண்டி தங்களது அபார திறமையால் ஐபிஎல் வரலாற்றில் நிறைய கேட்ச்களை பிடித்த டாப் 5 தரமான பீல்டர்களை பற்றி பார்ப்போம்.

Bravo

7. ட்வய்ன் ப்ராவோ: வெஸ்ட்இண்டீசை சேர்ந்த நட்சத்திர வீரர் ட்வயன் பிராவோ சென்னை அணியில் பல வருடங்களாக விளையாடி தமிழக ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்றுள்ளார். இவர் 159 போட்டிகளில் 80 கேட்ச்களை பிடித்து இந்த பட்டியலில் 7-வது இடம் பிடிக்கிறார். அதிலும் ஒவ்வொரு முறை கேட்ச் பிடித்த பின் வகைவகையாக மைதானத்திலேயே டான்ஸ் ஆடும் அவரை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

- Advertisement -

6. ரவிந்திர ஜடேஜா: தற்போதைய தேதியில் உலக அளவில் நம்பர்-1 பீல்டராக வலம் வரும் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி பக்கத்தில் இருந்தால் கூட துல்லியமாக பந்தை மின்னல் வேகத்தில் எறிந்து ரன் அவுட் செய்வதில் வல்லவர். பீல்டங்க்காகவே ரசிகர்களிடம் அதிக புகழ் பெற்றுள்ள அவர் 208 போட்டிகளில் 86 கேட்ச்களை பிடித்து இந்த பட்டியலில் 6-வது இடம் பிடிக்கிறார்.

Jadeja

ஷிகர் தவான்: டெல்லியைச் சேர்ந்த மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 201 போட்டிகளில் 86 கேட்ச்களை பிடித்து இதே பட்டியலில் 6-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொரு முறையும் கேட்ச் பிடித்த பின் அதை கொண்டாடும் வகையில் தொடையைத் தட்டி மீசை முறுக்கி கெத்தாக அவர் காட்டும் போஸை பார்க்கும் எதிரணி ரசிகர்களின் முகத்தில் கூட புன்னகை வராமல் இருக்காது.

- Advertisement -

5. விராட் கோலி: தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகுந்த அக்கறை காட்டும் நட்சத்திர வீரர் விராட் கோலி பிட்னெஸ் என்ற விசயத்தில் உலக அளவில் இருக்கும் இதர கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் கேட்ச் பிடிப்பதற்கு பிட்னஸ் என்பது ஒரு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் 217 போட்டிகளில் 89 கேட்ச்களை பிடித்துள்ள அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடிக்கிறார்.

ABD

4. ஏபி டீ வில்லியர்ஸ்: தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மைதானத்தில் தனது பேட்டிங்கால் 360 டிகிரியில் பந்தைப் பறக்க விடுவதில் வல்லவர். அதேபோலவே எதிரணிகள் கொடுக்கும் கேட்சை மைதானத்தில் எந்த இடத்தில் நின்றாலும் கச்சிதமாக பிடிக்கும் திறமை பெற்ற அவர் பவுண்டரியின் அருகில் நின்று சூப்பர்மேன் போல தாவி பிடித்த கேட்ச்களையெல்லாம் ரசிகர்கள் மறக்க முடியாது. அந்த வகையில் கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற அவர் 184 போட்டிகளில் 90 கேட்ச்களை பிடித்து இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. ரோஹித் சர்மா: ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மா 222 போட்டிகளில் 95 கேட்ச்களை பிடித்து இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

2. கைரன் பொல்லார்ட்: பொதுவாகவே முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் பெரும்பாலும் பவுண்டரி எல்லையில் நின்று பீல்டிங் செய்வார். அப்படிப்பட்ட நிலையில் எதிரணி பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு குறுக்கே மலை போல நிற்கும் இவரைத் தாண்டி தான் செல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு தரமான அவர் 187 போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்து இந்த பட்டியலில் 2-வது இடத்திலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த வெளிநாட்டு வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

1. சுரேஷ் ரெய்னா: இந்தியா கண்ட மகத்தான பீல்டர் சுரேஷ் ரெய்னா கடந்த பல வருடங்களாக சென்னை அணிக்கு பேட்டிங் அவ்வப்போது பகுதிநேர பவுலிங் அதைவிட அற்புதமான பீல்டிங் என 3 வகையான துறைகளிலும் தனது அபார திறமையால் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர். மைதானத்தில் எங்கு நின்றாலும் தன்னிடம் கேட்ச் வந்தால் அதை கச்சிதமாக பிடிக்கும் திறமை பெற்ற அவர் 205 போட்டிகளில் 109 கேட்ச்களை பிடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற தரமான சாதனை படைத்துள்ளார்.

Advertisement