- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரே ஃபார்முக்கு வந்துட்டாரு, நேரம் நெருங்கிடுச்சு நீங்க எத்தனை நாள் இப்டியே உருட்டுவீங்க – ரோஹித்தை விமர்சித்த கம்பீர்

2023 காலண்டர் வருடத்தில் ஜூலை மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட்டு வருகிறது. சொல்லப்போனால் 2013க்குப்பின் எவ்விதமான உலகக் கோப்பைகளையும் வெல்ல முடியாமல் திண்டாடி வரும் இந்தியா இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் இந்திய பேட்டிங் துறையின் தூண்களாக கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்த உலகக் கோப்பைகளை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்றே சொல்லலாம்.

ஏனெனில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கருதப்படும் இவர்கள் சீனியர் வீரர்களாகவும் கேப்டனாகவும் உருவெடுத்த பின் இந்தியாவுக்கு இதுவரை ஒரு உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை. எனவே இந்த வருடம் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தை சந்தித்துள்ள அவர்களில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு வந்த விமர்சனங்களை 2022 ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கிய விராட் கோலி டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்து பழைய பன்னீர்செல்வமாக பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

உருட்டல் எத்தனை நாள்:
ஆனால் மற்றொரு தூணாக கருதப்படும் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஹிட்மேன் என்ற பெயருக்கேற்ப ரன்களை குவிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். கடைசியாக கடந்த 2020இல் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்திருந்த அவர் கடந்த 2021 ஆகஸ்ட்க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து கடந்த 50 இன்னி்ங்ஸ்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சதமடிக்க முடியாமல் தவிக்கும் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 83, 17, 42 என நல்ல தொடக்கத்தை பெற்றும் அதை 3 இலக்க ரன்களாக மாற்ற தவறினார்.

இந்நிலையில் விராட் கோலி சதமடிக்க முடியாமல் தவித்த போது கடுமையாக விமர்சித்ததை போலவே தற்போது ரோகித் சர்மாவை விமர்சிக்கும் நேரம் வந்து விட்டதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சாடியுள்ளார். குறிப்பாக உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் கேப்டனாக இருந்து கொண்டு கடந்த 50 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் எத்தனை நாட்கள் கடத்துவீர்கள் என்ற வகையில் சமீபத்திய பேட்டியில் அவர் கடுமையாக விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த மூன்றரை வருடங்களாக விராட் கோலி சதமடிக்காமல் இருந்த போது எப்படி நாம் பேசினோமோஅதே போல் ரோகித் சர்மாவை பற்றி இப்போது பேச வேண்டியுள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 50 இன்னிங்ஸ்களாக அவர் சதமடிக்காமல் இருந்து வருகிறார். 50 வாய்ப்புகள் என்பது மிகவும் அதிகமாகும். இது கடந்த ஒரு சில தொடர்களில் மட்டும் அவர் அடிக்கவில்லை என்பதை காட்டவில்லை. மாறாக கடந்த உலகக் கோப்பையிலிருந்தே ரோஹித் சர்மா தடுமாறுவதை காட்டுகிறது. ஆனால் அவர் எப்போதும் அசால்டாக சதமடிப்பதற்கு பெயர் போனவர்”

“இப்போதும் அவர் நல்ல பார்மில் இருந்து நல்ல தொடக்கத்தை பெறுகிறார் ஆனால் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் தவிக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் விராட் கோலி முழுவதுமாக திரும்பி விட்டார். எனவே ரோகித் சர்மா குறைந்தபட்சம் உலக கோப்பைக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்ப வேண்டும். ஏனெனில் இந்திய பேட்டிங் துறையில் இந்த இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். குறிப்பாக உலகக் கோப்பை வெல்வதற்கு இந்த இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:பனியின் தாக்கத்தை குறைக்க 2023 உ.கோ’யில் அதை செய்ங்க ப்ளீஸ் – ஐசிசிக்கு அஷ்வின் வைக்கும் அதிரடி கோரிக்கை என்ன

அவர் கூறுவது போல சதமடிக்கவில்லை என்றாலும் விராட் கோலி தடுமாறிய அளவுக்கு தற்போது ரோகித் சர்மா தடுமாறவில்லை என்பதை நிதர்சனம். ஏனெனில் தற்போதும் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை பெறும் அவர் சதத்தை நெருங்க முடியாமல் அவுட்டாகி விடுகிறார். எனவே விராட் கோலியை விட முன்கூட்டியே தொடக்க வீரராக களமிறங்கும் அவர் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக சதமடித்து உலகக் கோப்பைக்கு முன் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

- Advertisement -
Published by