பனியின் தாக்கத்தை குறைக்க 2023 உ.கோ’யில் அதை செய்ங்க ப்ளீஸ் – ஐசிசிக்கு அஷ்வின் வைக்கும் அதிரடி கோரிக்கை என்ன

Ashwin
- Advertisement -

2023 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் என்ன தான் டி20 உலககோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் 50 ஓவர் உலகக் கோப்பை தான் சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் தொடராக கருதப்படுகிறது. அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக இத்தொடர் இப்போது தான் இந்திய மண்ணில் மட்டும் நடைபெறுகிறது. ஏனெனில் இதற்கு முன் 1987, 2011இல் நடைபெற்ற உலக கோப்பைகளை பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் சேர்ந்து இந்தியா நடத்தியது.

MS Dhoni Kapil Dev World Cup

- Advertisement -

எனவே தற்போது பிரத்தியேகமாக இந்தியாவில் நடத்தும் இத்தொடரை வெற்றிகரமாக தரமாக ரசிகர்களை கவரும் வகையில் நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ ஏற்கனவே செய்து வருகிறது. அதற்கு அனைவரும் எதிர்பார்க்கும் சுழலுக்கு மட்டுமே சாதகமில்லாத ஆடுகளங்கள் இல்லாமல் பேட்டிங் பவுலிங், வேகம் மற்றும் சுழல் ஆகிய அனைத்துக்கும் சமமாக இருக்கும் வகையிலான ஆடுகளங்களை தயாரிப்பதில் பிசிசிஐ முழு கவனம் செலுத்தி வருகிறது.

அஷ்வின் யோசனை:
இருப்பினும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பனியின் தாக்கம் எப்போதுமே ஆட்டத்திலும் வெற்றியிலும் வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்து வருகிறது. ஏனெனில் பனியால் ஏற்படும் ஈரப்பதத்தால் பந்தை கச்சிதமாக பிடித்து நினைத்த இடத்தில் பந்து வீச்சாளர்கள் வீச முடியாது, துல்லியமாக ஃபீல்டிங் செய்து கேட்ச் பிடிக்க முடியாது போன்றவை இந்தியாவில் நடைபெறும் பகலிரவு போட்டிகளில் நிலவக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.

Eden Gardens Kolkata

அதனால் பெரும்பாலான போட்டிகளில் டாஸ் வெல்லும் பெரும்பாலான கேப்டன்கள் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வழக்கமாகும். மேலும் இப்போதெல்லாம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் என்றாலே டாஸ் வென்று சேசிங் செய்தால் கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்ற நிலைமை காணப்படுகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கு இந்தியாவில் வழக்கமாக மதியம் 1.30 மணிக்கு துவங்கும் 50 ஓவர் போட்டியை 11.30 மணிக்கே துவங்க ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆலோசிக்க வேண்டுமென ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

இதனால் பனியின் தாக்கத்தை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “உலக கோப்பையில் எந்த மைதானத்தில் நாம் எப்போது விளையாடுகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். எனவே அதில் என்னுடைய ஆலோசனை அல்லது கருத்து என்னவெனில் நாம் ஏன் காலை 11.30 மணிக்கே போட்டிகளை துவங்கக்கூடாது. குறிப்பாக கௌகாத்தியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக இருந்த பிட்ச்சிலும் இந்தியா அழகாக பேட்டிங் செய்து பெரிய ரன்கள் (373/7) குவித்தது. ஆனாலும் நகத்தையும் பல்லையும் கடித்துக் கொண்டு இலங்கையை கட்டுப்படுத்தி (306/8) இறுதியில் இந்தியா வென்றது”

“அப்போட்டியில் இரு அணிகளின் தரம் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஒருவேளை டாஸ் தோற்றிருந்தால் பனி அந்த 2 அணிகளுக்கும் இடையே வெற்றியில் குறைவான வித்தியாசத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்கும். மேலும் காலையிலேயே போட்டி துவங்கினால் அதிக ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லலாம். ஆனால் காலையிலேயே துவங்கினால் உலகக்கோப்பை போட்டிகளை அவர்கள் பார்க்க மாட்டார்களா? மேலும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை குளிர்காலத்தில் நடைபெற்றது”

- Advertisement -

“ஆனால் அது டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும் ரசிகர்கள் பார்ப்பதற்கு தகுந்த நேரமல்ல. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த உலகக் கோப்பையை அனைவரும் விரும்பிப் பார்த்தனர். எனவே இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் நிச்சயம் பனியின் தாக்கம் இருக்கும் என்று ஐசிசிக்கு தெரியும். அதே சமயம் 11.30 மணிக்கே போட்டியை நடத்தினால் அந்த பிரச்சனையை தவிர்க்க முடியும் என்பதும் ஐசிசிக்கு தெரியும்”

இதையும் படிங்க: IND vs SL : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் படைக்காத சாதனையை நிகழ்த்தி – வரலாறு படைத்த இந்தியா

“அப்படிப்பட்ட நிலையில் அதை ஏன் நாம் செய்யக்கூடாது? நமது ரசிகர்கள் 11.30 மணிக்கு உலக கோப்பையை பார்க்க மாட்டார்களா. மேலும் சமீபத்தில் இந்திய மண்ணில் பனியன் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இங்கிலாந்து வாரியம் தனியாக பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் பனியன் தாக்கம் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்துள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement