- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாண்டியா தேர்வு, ரிங்குவுக்கு இடமில்லை.. 2024 டி20 உ.கோ தொடருக்காக பிசிசிஐ வெளியிட்ட 15 பேர் இந்திய அணி

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து சாம்பியன் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்க உள்ளது. அதில் விளையாடுவதற்கான இந்திய அணி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் மிகப்பெரிய விவாதத்திற்கு பின் விராட் கோலி தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார் என்ற விமர்சனங்கள் காணப்பட்டாலும் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இந்திய அணி:
எனவே அந்த அனுபவத்திற்கு மதிப்பளித்து மீண்டும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இரண்டாவது துவக்க வீரராக யசஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வாகிய அசத்தியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் அதிவேகமான அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் சமீப காலங்களில் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் அற்புதமாக செயல்பட்டார். எனவே உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தேர்வாகியுள்ள அவருடன் நான்காவது இடத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார்.

அதைத்தொடர்ந்து சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ள நிலையில் முதன்மை ஆல் ரவுண்டராகவும் துணை கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா தேர்வாகியுள்ளார். அதே போல விக்கெட் கீப்பராக காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணிக்காக அசத்தி வரும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் மிரட்டி வரும் சிவம் துபே இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

- Advertisement -

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கை ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது. அதே போல குல்தீப் மற்றும் சஹால் ஆகியோர் ஸ்பின்னர்களாக ஜோடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இறுதியாக பும்ரா, சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த முறை தேர்வைன கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

மேலும் சுப்மன் கில், ஆவேஷ் கான், கலீல் அஹ்மத் ஆகியோரும் ரிசர்வ் வீரர்களாக தேர்வாகியுள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்டிக் பாண்டியா (துணை கேப்டன்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமத் சிராஜ். ரிசர்வ் : சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்

- Advertisement -