
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்த பெங்களூரு நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக முதல் 6 போட்டிகளில் 6 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததால் பெங்களூரு முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே 18ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
அதையும் சேர்த்து கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியான 6 வெற்றிகளை பெற்ற பெங்களூரு தற்போது நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்து அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளது. முன்னதாக அப்போட்டி முடிந்ததும் தோனி முதல் வீரராக எதிரணிக்கு கை கொடுப்பதற்காக சிஎஸ்கே வீரர்களை தலைமை தாங்கி வரிசையில் சென்றார். ஆனால் மறுபுறம் சிஎஸ்கே அணியை தோற்கடித்த மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள் மைதானத்தின் மற்றொரு பகுதியில் வெறித்தனமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மரியாதையை பாருங்க:
அதனால் ஏற்கனவே தோல்வியை சந்தித்த வெறுப்பில் இருந்த தோனி தாம் கேப்டன் இல்லை என்பதை உணர்ந்து ருதுராஜை வர சொல்லிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றார். ஆனால் அதை அப்படியே உல்டாவாக மாற்றிய ஆர்சிபி ரசிகர்கள் ஜென்டில்மேன் மரியாதை இல்லாமல் தோனி இப்படி கை கொடுக்காமல் செல்லலாமா? என்று விமர்சித்தனர்.
இருப்பினும் அதற்கு மைக்கேல் வாகன், ஹர்ஷா போக்லே ஆகியோர் உண்மையை எடுத்துரைத்து தோனிக்கு கை கொடுக்காத ஆர்சிபி வீரர்களை விமர்சித்திருந்தனர். இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி 2 பத்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்த ஜடேஜா சென்னையை வெற்றி பெற வைத்தார். அப்போது சிஎஸ்கே வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் ஜடேஜாவை இடுப்பில் தூக்கி வைத்து தோனி கொண்டாடியதை மறக்க முடியாது. இருப்பினும் அந்த தருணம் முடிந்ததுமே எதிரணிக்கு மரியாதை கொடுப்பதற்காக கொண்டாட்டத்தை பாதியிலேயே நிறுத்திய தோனி குஜராத் வீரர்களுக்கு சென்று முதல் ஆளாக கை கொடுத்தார். அதே போல 2018 ஐபிஎல் ஃபைனலில் ஷேன் வாட்சன் சதத்தால் ஹைதராபாத்தை தோற்கடித்த சென்னை 3வது கோப்பையை வென்றது.
இதையும் படிங்க: விராட் கோலி அவரோட சாதனையையே முறியடிச்சி மேல போக போறாரு – மேத்யூ ஹைடன் புகழாரம்
அப்போது பெவிலியனில் இருந்து வந்த தோனி பெரியளவில் கொண்டாடாமல் கட்டை விரலை மட்டும் உயர்த்திக் காட்டி விட்டு நேரடியாக ஹைதராபாத் வீரர்களுக்கு கைகொடுத்து மரியாதை செய்தார். அப்படி கோப்பையை வென்ற போதே “எதிரணிக்கு மரியாதை செய்த எங்க தல தோனிக்கா மரியாதை தெரியாது” என்று தற்போது 2018, 2023 ஃபைனல் வீடியோக்களை ஆதாரமாக வைத்து ஆர்சிபி ரசிகர்களுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.