- Advertisement -
ஐ.பி.எல்

விராட் கோலி அவரோட சாதனையையே முறியடிச்சி மேல போக போறாரு – மேத்யூ ஹைடன் புகழாரம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் நிறைவடைய இருக்கும் இந்த தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

அதன்படி இந்த தொடரின் குவாலிபயர் 1 ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளும், எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளும் பலபரீட்சை நடத்த இருக்கின்றன. அதனை தொடர்ந்து எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் விளையாடும்.

- Advertisement -

அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் குவாலிபயர் ஒன்றில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும். இந்நிலையில் இந்த தொடரின் போது ஆரம்ப கட்டத்தில் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணியானது அடுத்தடுத்த ஆறு வெற்றிகளின் மூலம் பிளே ஆப் சுற்றுற்கு இறுதியாக நுழைந்தது.

இந்த தொடரில் பெங்களூரு அணியில் மற்ற வீரர்கள் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த சீசனில் 14 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதம் என 708 ரன்களை குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராகவும் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் போட்டிகளில் அவர் நிச்சயம் தன்னுடைய சாதனையை முறியடித்து மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்துவார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி தனது சிறப்பான இரண்டாவது சீசனை தற்போது விளையாடி வருகிறார். 2016-ல் எப்படி செயல்பட்டாரோ அதேபோன்று இந்த வருடமும் எல்லா போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் அதை குறுக்கு வழியா பயன்படுத்தாதீங்க.. அஜித் அகர்கருக்கு மறைமுக பாடம் எடுத்த கம்பீர்

என்னை பொருத்தவரை அவரது அர்ப்பணிப்பும், ஆர்வமும் இந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுகிறது. எனவே நிச்சயம் அவர் 2016-ஆண்டு அடித்ததை விட இந்த ஆண்டு நிறைய ரன்களை அடிப்பார் என் ஹைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 973 ரன்கள் குவித்ததே இதுவரை ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிக ரன்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -