உங்கட்ட பணம் இருந்தாலும் எங்ககிட்ட அது இருக்கு, என்ன ஆனாலும் அது மட்டும் நடக்காது – இந்தியாவுக்கு கம்ரான் அக்மல் பதிலடி

Kamran
Advertisement

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடமாக எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக இந்த வருடம் பாகிஸ்தானுக்கு சென்று அங்கு நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அந்த தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அறிவித்துள்ளது. அதனால் கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் இருநாட்டுக்குமிடையே பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இருப்பினும் ஆசிய கவுன்சிலுக்கு நிதி கொடுக்கும் நாடாகவும் ஐசிசிக்கு அதிக பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் நாடகவும் இருக்கும் இந்தியா எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியாவுக்கு வந்து உலக கோப்பையில் பங்கேற்காமல் போனால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணம் கிடைக்காது என்பதால் நிச்சயம் இந்த விவாரத்தில் பாகிஸ்தான் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.

மரியாதை முக்கியம்:
மேலும் தற்போதுள்ள பொருளாதார நிலையில் இந்த விவகாரத்தில் உணர்ச்சிபூர்வமான முடிவு எடுக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்களுக்கும் சுயமரியாதை இருப்பதால் தங்கள் நாட்டுக்கு இந்தியா வராமல் போனால் அவர்களது நாட்டில் நடைபெறும் உலக கோப்பையை பாகிஸ்தான் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிகப்படியான பணம் கிடைப்பதால் இந்தியா மற்றும் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுப்பதாக தெரிவிக்கும் அவர் தங்களிடம் பணம் இல்லை என்றாலும் சுயமரியாத இருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் இந்திய வீரர்கள் பிஎஸ்எஎல் தொடரில் பங்கேற்க வரவே வேண்டாம் என்று வெளிப்படையாக பேசும் அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியிருக்கின்றது. “ஆசிய கோப்பை துபாய் உட்பட எங்கு நடைபெற்றாலும் அதில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டும். ஆனால் இந்தியர்கள் நமது நாட்டுக்கு வராமல் போனால் நாமும் அவர்களுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான போட்டி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகக்கோப்பையையும் புறக்கணிக்க வேண்டும்”

“இந்த முடிவு ஐசிசி மற்றும் பாகிஸ்தான் வாரியம் கையில் இருந்தாலும் நமக்கும் கொஞ்சம் சுயமரியாதை இருக்கிறது. நாமும் வரலாற்றில் உலக சாம்பியனாக இருந்துள்ளோம். மேலும் இந்த விவகாரத்தில் பிரச்சனை என்பது இருநாட்டு வாரியங்களுக்கு இடையே அல்ல இருநாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயானது. அதே போல் பிஎஸ்எல் தொடரில் இந்திய வீரர்கள் விளையாட கூடாது. அவர்களை வெளிநாட்டு டி20 தொடர்களில் விடாமல் இந்திய வாரியம் சரியான வேலைகளை செய்து வருகிறது. அவர்களுக்கு இரண்டரை மாதம் ஐபிஎல் மற்றும் இந்திய நாட்களில் சர்வதேச போட்டிகள் இருக்கிறது என்பது நன்றாக தெரியும்”

இதையும் படிங்க: அவங்க ஒன்னும் வில்லன் கிடையாது, சர்ச்சை விதியில் விமர்சனத்தை நொறுக்கும் வகையில் பேசிய – எம்சிசி மெம்பர் சங்ககாரா

“அத்துடன் ஐபிஎல் தொடரால் இந்திய வீரர்கள் பொருளாதார அளவில் வலுவானவர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட வேண்டிய அவசியமில்லை. அத்துடன் இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் வீரர்களுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது என்பதை நமது வாரியம் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களிடம் 100 டெஸ்ட் போட்டிகளின் விளையாடிய 14 – 15 வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் பாகிஸ்தானில் 2 – 3 பேர் மட்டுமே உள்ளனர். மொத்தத்தில் ஐபிஎல் அவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கிறது. அதற்கு முன்பாக பிக்பேஷ் தொடர் மட்டுமல்லாது உலகில் எந்த டி20 தொடரும் நிற்க முடியாது” என்று கூறினார்.

Advertisement