அவங்க ஒன்னும் வில்லன் கிடையாது, சர்ச்சை விதியில் விமர்சனத்தை நொறுக்கும் வகையில் பேசிய – எம்சிசி மெம்பர் சங்ககாரா

Sangakkara
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பவுலர்கள் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து பேட்ஸ்மேன்கள் வெள்ளை கோட்டை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யும் விதிமுறை அந்த காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆனால் பவுலர் பந்தை வீசுவார் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே ஆவலுடன் ரன்னை எடுப்பதற்காக பேட்ஸ்மேன் நம்பி வெளியேறும் போது போது அவுட் செய்யப்படுவதால் அது நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஒரு சமயத்தில் இந்திய முன்னாள் வீரர் வினோ மன்கட் அப்படி ரன் அவுட் செய்தது முதல் முறையாக உலக அளவில் பேசப்பட்டது. அதனால் கடந்த பல வருடங்களாக அந்த வகையான அவுட்டை அவரது பெயருடன் இணைத்து அழைக்கப்பட்டது.

Ashwin Buttler Mankad

- Advertisement -

ஆனால் கிரிக்கெட்டில் பேட்டிங் – பவுலிங் ஆகிய இரண்டும் சமமாக இருந்தால் தான் போட்டி தரமாக இருக்கும் என்பது அனைவராலும் பேசப்படும் ஒரு கூற்றாகும். அப்படிப்பட்ட நிலையில் பவுலர்கள் மட்டும் ஒரு இன்ச் காலை வெளியே வைத்து போட்டால் கூட அதற்கு உடனடியாக நோ-பால் தண்டனை வழங்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்கள் மட்டும் பந்து வீசுவதற்கு முன்பாகவே பல அடி தூரங்கள் நகர்வது எந்த வகையில் நியாயம் என்ற கண்ணோட்டத்துடன் 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் அவ்வாறு அவுட் செய்தார்.

வில்லன் கிடையாது:
அதற்காக உலக அளவில் விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டதாக விடாப்பிடியாக நின்று அவர் உலகின் அனைத்து பவுலர்களும் அதை தைரியமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது தொடர்ச்சியான கோரிக்கையில் நியாயம் இருந்ததால் கடந்த 2022இல் அதை நேர்மைக்கு புறம்பான பிரிவிலிருந்து மாற்றிய லண்டனில் எம்சிசி ரன் அவுட் பிரிவில் அதிகாரப்பூர்வமாக சேர்த்தது. அதை ஐசிசியும் ஏற்று கொண்டதால் சமீப காலங்களில் அந்த வகையான ரன் அவுட் நிறைய செய்யப்படுகிறது.

Shami Mankad Rohit Sharma

ஆனாலும் அப்படி நடக்கும் போதெல்லாம் என்னமோ அந்த பவுலர் விதிமுறைக்கு எதிராகவும் நேர்மைக்கு புறம்பாகவும் நடப்பதாக பெரும்பாலானவர்கள் சேர்ந்து திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் துபாயில் கூடிய எம்சிசி அமைப்பின் தலைமை கூட்டத்தில் இனிமேல் இந்த வகையான அவுட்க்கு விமர்சனங்கள் வந்தாலும் அமைதியாக இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் இங்கிலாந்தின் சார்லி டீனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்த போது எழுந்த விமர்சனங்களை தனியாக அறிக்கை விட்டு எம்சிசி அமைதிப்படுத்தியது.

- Advertisement -

அப்படி விதிமுறை பற்றி தெளிவாக விளக்கியும் தொடர்ந்து விமர்சனங்கள் வருவதால் தொடர்ந்து விளக்கம் அளித்துக் கொண்டே இருக்க முடியாது என அறிவித்துள்ள எம்சிசி இந்த விவகாரத்தில் பவுலர்கள் ஒன்றும் வில்லன் கிடையாது என்று அனைத்து விமர்சகர்களுக்கும் இறுதியான பதிலை கொடுத்துள்ளது. இது பற்றி எம்சிசி அமைப்பின் உறுப்பினர் மற்றும் முன்னாள் இலங்கை ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் பேசியுள்ளது பின்வருமாறு.

Sanga

“இங்கே பவுலர்கள் ஒன்றும் வில்லன் கிடையாது. அதே சமயம் பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்பதற்கு உரிமை உள்ளது. இருப்பினும் அவர்கள் களத்தில் ரன்களை திருட முயற்சித்தால் ரிஸ்க் ஆன முறையில் அவர்களுக்கு அவுட் கொடுக்கப்படும். எனவே அவர்கள் அதை செய்ய நினைத்தால் அடிப்படை விதிமுறையை உடைப்பதாக அர்த்தம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அவரும் மனுஷன் தாங்க, ஏன் இப்படி கலாய்க்கிறீங்க – இந்திய வீரருக்கு இயன் பிஷப் மெகா ஆதரவு

இது பற்றி எம்சிசி தலைவர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங் கூறியுள்ளது பின்வருமாறு. “எங்களுடைய வாதம் மிகவும் எளிதானது. அதாவது பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக களத்தில் ரன்களை திருடக்கூடாது. அதையும் தாண்டி அவர்கள் செய்யும் பட்சத்தில் இந்த வகையில் அவுட் கொடுக்கப்படும். இல்லையேல் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார். இப்படி எம்சிசி தாமாக வந்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் அடுத்த முறை இந்த வகையான அவுட் நிகழும் போது எந்தளவுக்கு விமர்சனங்கள் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement