அவரும் மனுஷன் தாங்க, ஏன் இப்படி கலாய்க்கிறீங்க – இந்திய வீரருக்கு இயன் பிஷப் மெகா ஆதரவு

Bishop
- Advertisement -

நட்சத்திர இந்திய வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வருவதால் தற்சமயத்தில் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்துள்ளார். குறிப்பாக 2019 காலகட்டத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த அவரை பிசிசிஐ அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க நினைத்தது. ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நிறைய போட்டிகளில் மெதுவாக விளையாடிய அவர் குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆனாலும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு பெற்று வந்ததால் இருந்த விமர்சனங்களை சமாளிக்க முடியாத பிசிசிஐ அந்தப் பதவியை பறித்தாலும் மீண்டும் இடம் கொடுத்துள்ளது.

KL Rahul Dravid

- Advertisement -

அத்துடன் வெளிநாடுகளில் சிறந்த தொடக்க வீரராக செயல்பட்டுள்ளதால் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக அறிவித்தது ரசிகர்களை ஆழ்த்தியது. ஆனால் 8 வருடங்களாக விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு குல்தீப் யாதவ், சுப்மன் கில் போன்ற உச்சகட்ட பார்மில் இருக்கும் வீரர்களுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கடந்த சில தினங்களாகவே ட்விட்டரில் ஆதாரப்பள்ளி விவரங்களுடன் கடுமையாக விமர்சித்தார்.

பிஷப் ஆதரவு:
அதற்கு மற்றொரு புள்ளி விவரத்தை கையிலெடுத்து வந்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தக்க பதிலடி கொடுத்தது இறுதியில் மிகப்பெரிய சண்டையாக மாறியது. முதலில் தற்சமயத்தில் உச்சகட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வரும் ராகுல் கிளாஸ் நிறைந்த வீரர் என்பதால் இந்த மோசமான தருணத்தில் ஆதரவு கொடுக்குமாறு கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். வரலாற்றில் சச்சின் உட்பட யாருமே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதில்லை என்று ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Venkatesh prasad KL rahul

இந்நிலையில் இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் வாயிலாக தெரிந்து கொண்டதாக கூறும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிசப் ராகுலும் மனிதர் என்பதால் அதிகமாக கிண்டலடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் திறமையான வீரரான ராகுல் விரைவில் பார்முக்கு திரும்புவார் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த விவாதத்தில் என்னுடைய கருத்து எதுவுமில்லை. ஏனெனில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் இதுவும் ஒரு அங்கமாகும். நானும் இது போன்ற நிலைமைகளை சந்தித்துள்ளேன். ஆனால் சில நாடுகளில் இந்த 1000 முறை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அந்த விமர்சனங்கள் அதிகப்படியான மக்கள் தொகையால் வரக்கூடியதாகும்”

- Advertisement -

“வெளியிலிருந்து இந்த விவாதத்தை பார்க்கும் போது ஒரு நல்ல விவாதமாக தெரியலாம். ஆனால் இறுதியில் அவர் மனிதர் தான். மேலும் அவருடைய பெயர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக கிண்டலடிக்கப்படுவதை பார்ப்பது எளிதான காரியமல்ல. எனவே இப்போதும் திறமையான வீரரான அவர் ஃபார்முக்கு திரும்புவார். ஆனால் அதற்கு சற்று நேரங்கள் ஆகலாம். இருப்பினும் சில முன்னாள் வீரர்கள் தன்னிச்சையாக இதைப் பற்

Bishop

முன்னதாக மனதளவில் ஏற்பட்டதாகத்தால் ராகுல் பார்மை இழந்துள்ளதாக தெரிவித்த முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இதிலிருந்து மீண்டு வர சிறிது காலம் ஓய்வெடுத்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று தன்னம்பிக்கையுடன் விளையாடுவது சிறந்த வழி என்று ஆலோசனை தெரிவித்தார். சொல்லப்போனால் இந்த தொடர்ச்சியான விமர்சனங்களை வைப்பவர்களில் யாருமே ராகுல் மீதுள்ள வெறுப்பின் மீது விமர்சிக்கவில்லை.

இதையும் படிங்க:40 வயதிலும் ஓயாமல் ஓடும் ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஓய்வுக்கு முன் படைக்க அதிக வாய்ப்புள்ள 3 உலக சாதனைகள் இதோ

மாறாக வரலாற்றில் இதுபோன்ற தருணங்களில் சச்சின் முதல் கங்குலி வரை உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று பார்மை மீட்டெடுத்தது போல் ஏன் ராகுல் செய்யப்படக் கூடாது என்பதே விவாதமாக இருக்கிறது. அது வரை பார்மில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement