40 வயதிலும் ஓயாமல் ஓடும் ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஓய்வுக்கு முன் படைக்க அதிக வாய்ப்புள்ள 3 உலக சாதனைகள் இதோ

Anderson-3
- Advertisement -

இங்கிலாந்து நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 40 வயதில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறியுள்ளது ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் கிரிக்கெட்டில் 37 வயதை தாண்டி வெற்றிகரமாக விளையாடுவதே சாதனையாகும். அத்துடன் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயங்கள் சந்திக்கக் கூடியவர்கள் என்பதை அறிவோம். மேலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான 5 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அதையும் தாண்டிய சாதனையாகும். ஆனால் அவை அனைத்தையும் தன்னுடைய கடினமான உழைப்பால் உருவாக்கிய ஃபிட்னஸை வைத்து சமாளிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது அனுபவத்தால் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்த இடத்தை பிடித்துள்ளது உண்மையாகவே பாராட்டுக்குரியதாகும்.

James Anderson

- Advertisement -

கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களில் வழக்கம் போல தடுமாறினாலும் பழைய சரக்கை போல அனுபவத்தால் வயது அதிகரிக்க அதிகரிக்க அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி 1936ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பவுலராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அப்படி தனது அனுபவத்தால் அனைத்தையும் சாதிக்கும் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக படைக்க வாய்ப்புள்ள மேலும் சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. 700 விக்கெட்கள்: இதுவரை 178 போட்டிகளில் விளையாடி 682* விக்கெட்களை எடுத்துள்ள அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

James Anderson ENG vs RSA

40 வயதிலும் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை எடுத்து வரும் அவர் இன்னும் ஒரு சில போட்டிகளில் விளையாடினாலே டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது. அது நடைபெற்றால் தாமாகவே ஷேன் வார்னேவை முந்தி (708) முத்தையா முரளிதரனுக்கு (800) பின் அதிக விக்கெட்களை எடுத்த 2வது பவுலராகவும் பிரம்மாண்ட சாதனை படைக்க அவருக்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

2. 5 விக்கெட் ஹால்: கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் சதமடிப்பது சாதனையாக பார்க்கப்படுவது போலவே பவுலர்கள் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 32 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்துள்ள அவர் ஆல் டைம் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார்.

Anderson-3

நியூசிலாந்து ஜாம்பவான் சர் ரிச்சர்ட் ஹாட்லி 3வது இடத்தில் (36) இருக்கிறார். எனவே அடுத்து நடைபெறும் ஆஷஸ் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதற்குள் இன்னும் 5 முறை 5 விக்கெட் ஹால் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற ஹாட்லியின் சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைப்பார். அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது.

- Advertisement -

3. 1000 விக்கெட்கள்: 2002 முதல் 2015 வரை ஒருநாள் கிரிக்கெட்டில் 194 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் மொத்தம் 969* விக்கெட்களை எடுத்து ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கிளன் மெக்ராத் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ANDERSON

இதையும் படிங்க:ஏதாவது செய்யுங்க பாஸ். இல்லனா பொட்டலம் ஆயிடுவீங்க. ஆஸி அணியை சகட்டு மேனிக்கு – கலாய்த்து தள்ளிய சீக்கா

எனவே ஓய்வு பெறுவதற்கு முன் இன்னும் 31 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மற்றுமொரு உலக சாதனையை அவர் படைப்பார். அத்துடன் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோருக்கு பின் 1000+ விக்கெட்களை எடுத்த 3வது பவுலர் என்ற வரலாற்று பெருமையும் அவர் பெறுவார்.

Advertisement