ஏதாவது செய்யுங்க பாஸ். இல்லனா பொட்டலம் ஆயிடுவீங்க. ஆஸி அணியை சகட்டு மேனிக்கு – கலாய்த்து தள்ளிய சீக்கா

Kris Srikkanth
Advertisement

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துள்ள ஆஸ்திரேலிய அணியானது படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கியுள்ளது.

Pat-Cummins

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் திணறி வருவது அனைவரது மத்தியிலும் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி மூன்று நாட்களுக்குள் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

எனவே இனிவரும் போட்டிகளில் அவர்கள் இந்திய அணியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட்ருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வழக்கமான தனது நகைச்சுவையான பாணியில் ஆஸ்திரேலியா அணியை விமர்சித்துள்ளார்.

David-Warner

இது குறித்து அவர் கூறுகையில் : நான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் மேனேஜருக்கு ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகிறேன். “ஏதாவது செய்யுங்க பாஸ்” இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த தொடரின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நல்லவேளை நான் இங்கிலீஷில் பேசுவதால் நீங்கள் தப்பித்தீர்கள். சீக்கிரம் ஏதாவது செய்யுங்க இல்லனா பொட்டலம் ஆயிடுவீங்க.

இதையும் படிங்க : IND vs AUS : அந்த இந்திய வீரரை பாத்து எப்படி பேட்டிங் பண்ணனும்னு கத்துக்கோங்க – மைக் ஹஸ்ஸி அட்வைஸ்

ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த நீங்கள் பொட்டலம் ஆயிட்டீங்க என்று கிண்டல் செய்துள்ளார். எப்பொழுதுமே கிரிக்கெட் வர்ணனையிலும் நகைச்சுவையான பாணியில் பேசி வரும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தற்போது ஆஸ்திரேலிய அணியும் கிண்டலாக விமர்சித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை கண்ட ரசிகர்களும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement