அங்க தான் பெரிய ட்விஸ்ட் இருக்கு, செமி பைனலுக்கு முன்பாக இந்திய ரசிகர்களுக்கு பட்லர் சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன

IND vs ENg Rohit Sharma Jos Buttler
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வந்த இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதில் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் வலுவான இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.

INDvsENG

- Advertisement -

அப்போட்டியில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறி 2007க்குப்பின் 15 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டத்தை வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இந்த அரை இறுதியில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தை தோற்கடித்து 2007 போல மீண்டும் இறுதிப் போட்டியில் மோதுமா என்ற எதிர்பார்ப்பு இருநாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கதையில் ட்விஸ்ட்:

அதிலும் குறிப்பாக 2007இல் தோனி தலைமையில் மேஜிக் நிகழ்த்தியதை போல் இறுதிப்போட்டியில் மீண்டும் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் எகிறியுள்ளது. அந்த வகையில் பைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கதையில் இங்கிலாந்து பெரிய ட்விஸ்ட் ஏற்படுத்தப் போவதாக அதன் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். அதாவது அரையிறுதி போட்டியிலேயே இந்தியாவை தோற்கடித்து வெளியே அனுப்பி பைனலில் தங்களது அணி விளையாடும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Babar Azam Rohit Sharma IND vs PAK

“பைனலில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவதை பார்க்க விரும்பவில்லை. எனவே அது நடக்கக்கூடாது என்பதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் நாங்கள் முழுமையாக செய்ய உள்ளோம். அதில் இந்திய அணி மிக மிக வலுவானது. அவர்கள் கடந்த நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இயற்கையாகவே அதிகப்படியான திறமையும் ஆழமும் உள்ளது. அவர்களுடைய அணியில் அற்புதமான வீரர்கள் வரிசையாக உள்ளார்கள்”

- Advertisement -

“அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் பார்ப்பதற்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்த உலகக் கோப்பையில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களில் அவர் முக்கியமானவராக திகழ்கிறார். கிரிக்கெட்டில் அவர் சுதந்திரமாக விளையாடுவது அவருடைய மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அவரிடம் அனைத்து வகையான ஷாட்களும் உள்ளதால் அவரால் பவுலர்களை எளிதாக அடிக்க முடிகிறது. இருப்பினும் உலகில் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் அவுட் செய்வதற்கு ஒரே ஒரு தவறு செய்ய வைக்க வேண்டும். எனவே அவர் அந்தத் தவறை செய்ய வைக்க தேவையான வழியை நாங்கள் தீவிரமாக முயற்சிப்போம்” என்று கூறினார்.

Buttler

அத்துடன் இந்திய பவுலர்களை எதிர்கொள்வது பற்றியும் ஐபிஎல் தொடரில் இணைந்து விளையாடிய சஹாலுக்கு இடம் கிடைக்காதது பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “நான் எனது விளையாட்டில் தன்னம்பிக்கையுடன் உள்ளேன். இருப்பினும் இந்திய அணியில் எதிர்கொள்வதற்கு சவாலை கொடுக்கும் சில பவுலர்கள் உள்ளனர். அவர்களிடம் கடந்த காலங்களில் நீங்கள் தடுமாறியிருக்கலாம். ஆனால் அதற்காக பயந்து கொண்டு இம்முறை நான் களமிறங்க போவதில்லை”

“சஹால் சிறந்த பவுலர். அவருடன் ஐபிஎல் தொடரில் இணைந்து மகிழ்ச்சியுடன் விளையாடினேன். இந்த தொடரில் அவர் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை பெற்றுள்ளார். அதனால் எங்களுக்கு எதிரான போட்டியில் கூட அவர் மீண்டும் வாய்ப்பு பெறுவார் என்று நான் நம்புகிறேன். அவர் தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

Advertisement