ஐ.பி.எல் 11 ஆம் சீசனின் 43 லீக் போட்டி ஜெய்ப்பூர், சாவாய் மின்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு காரணம் சென்னை அணி யின் பந்து வீச்சாளர்கள் தான் காரணம் என்று தோனி தெரிவித்துள்ளார்.
நேற்று (மே 11) நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஒவர்களா முடிவில் 176 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரெய்னா 35 பந்துகளில் 52 ரன்களும், தொடக்க ஆட்டக்காரனா வாட்சன் 31 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனி 23 பந்துகளில் 33 ரன்களை எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் வெற்றிபெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டுமே 60 பந்துகளில் 95 ரன்களை எடுத்து அணியின் பாதி வெற்றி இலக்கை அடித்து முடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்யசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் “176 ரன்கள் என்பது சிறப்பான இலக்குதான் ஆனால், எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீசவில்லை. அவர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும் என்று அறிவுறுத்தியும் அவர்கள் அதை சரியாக செய்யவில்லை. இது சிறப்பான ஒரு அணி, நாங்கள் இனிமேல் தகுதி பெற வேண்டியது இல்லை ஆனால், வெற்றிபெற்று ஆக வேண்டும் “என்று தோனி கூறியுள்ளார். இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் தோல்விக்கு தோனி பந்துவீச்சாளர்களை குறை கூறியுள்ளது இது இரண்டாம் முறையாகும்.