- Advertisement -
ஐ.பி.எல்

CSK vs SRH : சதமடிக்காமல் வெளியேறிய வாட்சன். பரிசு தந்த வாட்சனின் மகன் – விவரம் இதோ

நேற்றைய போட்டியில் 96 ரன்களை அடித்த வாட்சன் 4 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடந்து வந்த வாட்சன் கேலரியில் இருந்த தனது மகனை நோக்கி பேட்டை உயர்த்தி பிளையிங் கிஸ் கொடுத்தார். அதற்கு வாட்சன் மகனும் சூப்பர் பேட்டிங் என கை தூக்கி காட்டினார். இந்த நிகழ்வு மைதானத்தில் இருந்த ரசிகர்களை நெகிழவைத்தது.

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -
Published by