நானும் தோனியும் இந்த ஒரு விடயத்தை மிகவும் நேசிக்கிறோம். அதனால் தான் இதெல்லாம் – வாட்சன் வெளியிட்ட பதிவு

Watson

இந்தியாவில் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் தற்போது இன்னும் ஐந்து நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றன. வரும் சனிக்கிழமை செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடர் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகள் இன்றி தவித்து வந்த ரசிகர்களுக்கு இத்தொடர் விருந்தாக அமையும் என்பது உறுதி.

CskvsMi

மேலும் சனிக்கிழமை துவங்க உள்ள முதல் போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளதால் அந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் உச்சத்திற்கு சென்று கொண்டு வருகிறது.

இதனிடையே இரு அணி வீரர்களும் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் அவ்வப்போது தங்களது பயிற்சி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் அணி நிர்வாகம் தொடர்ந்து பல வீரர்களின் அதிரடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள வெளியிட்ட வீடியோவில் தோனி பந்தை சிக்சருக்கு அடித்து தொலைத்த வீடியோவும் வைரலானது. அதே போன்று தற்போது சென்னை அணியின் துவக்க வீரர் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் ஒரு வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து அதுமட்டுமின்றி “இந்த பழுத்த 39 வயதில் நாங்கள் இரண்டு பேர் மிகவும் நேசிப்பதை செய்து கொண்டிருக்கிறோம்” என தெரிவித்து வலைப்பயிற்சியில் இருவரும் பந்துகளை சிக்சருக்கு அடிக்கும் வீடியோவை வாட்சன் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.