டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – வாட்சன் கணிப்பு

Watson-1
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களின் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதற்கான ஆர்வம் குறைந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டானது அழியும் விளிம்பு வரை சென்றது. அப்படி ஒருவேளையில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒரு புதிய முடிவை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பித்தது. அந்த வகையில் அனைத்து அணிகளும் விளையாடும் டெஸ்ட் தொடர்களின் முடிவுகளை அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடரை அறிவித்தது.

indvsnz

- Advertisement -

அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் கிடைத்தது. அப்படி 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முடிவுகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.

அதனை தொடர்ந்து தற்போது 2021 முதல் 2023 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து அணிகளுமே பங்கேற்று விளையாடி வரும் வேளையில் முதல் இடத்தில் தென்னாப்பிரிக்க அணியும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளன.

Steve Smith Virat Kohli IND vs AUS

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் உள்ளன. இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியில் போட்டியில் விளையாடப் போகும் அந்த இரண்டு அணி எது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த தொடருக்கான பைனலில் என்னைப் பொறுத்தவரை தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய தான் மோதும் என நினைக்கிறேன். ஏனெனில் மற்ற அணிகளை விட இவ்விரு அணிகளின் வெற்றி சதவீதங்கள் மிக அதிகமாக இருக்கிறது. எனவே நிச்சயம் அவர்கள் தான் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : அதான் தொடரை வென்று விட்டோமே, 3வது போட்டியில் அந்த 3 பேருக்கு வாய்ப்பு கொடுங்க – முன்னாள் வீரர் கோரிக்கை

அதே போன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் அவர்கள் பெற்ற வெற்றி சதவீதம் குறைவாக உள்ளதால் இனி வரும் போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் விளையாடினால் இறுதிப்போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு இருக்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement