அதான் தொடரை வென்று விட்டோமே, 3வது போட்டியில் அந்த 3 பேருக்கு வாய்ப்பு கொடுங்க – முன்னாள் வீரர் கோரிக்கை

INDvsZIM RAHUL
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து 2 – 0* என்ற கணக்கில் கோப்பையை முன்கூட்டியே கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் முறையே 189, 161 என குறைவான ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேவையான ரன்களை குவித்து முறையே 10 விக்கெட் மற்றும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

INDvsZIM

- Advertisement -

மறுபுறம் சமீபத்தில் இதே ஹராரே மைதானத்தில் வங்கதேசத்தை ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தோற்கடித்ததால் புத்துணர்ச்சியுடன் நல்ல பார்மில் இருந்த ஜிம்பாப்வே ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணியை இந்த தொடரில் தோற்கடிக்கும் என்று தலைமை பயிற்சியாளரும் சில வீரர்களும் சவால் கொடுத்தனர். ஆனால் வாயில் மட்டும் பேசிய அவர்கள் களத்தில் அதற்கேற்றாற்போல் செயல்படாமல் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

சான்ஸ் கிடைக்குமா:
முன்னதாக பலவீனமான எதிரணி என்பதாலேயே முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட இந்த தொடரில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் முதல் போட்டியில் எளிதான வெற்றி பெற்ற காரணத்தால் 2வது போட்டியில் ராகுல் திரிபாதி போன்ற இந்தியாவுக்காக விளையாட தவமாய் காத்துக்கிடக்கும் வீரர்களுக்கு அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற தீபக் சஹர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற காரணத்தை சொல்லாமல் ஷார்துல் தாகூருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது.

Rahul-Tripathi

இருப்பினும் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் இந்த தொடரில் மீண்டும் மீண்டும் விளையாடிய வீரர்களே விளையாடுவதில் என்ன பயன் என்று ரசிகர்கள் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியை வெளிபடுத்துகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் 3-வது போட்டியில் ராகுல் திரிபாதி, ருதுராஜ் கைக்வாட் மற்றும் காயமடைந்த வாசிங்டன் சுந்தருக்கு பதில் சேர்க்கப்பட்ட சபாஷ் அகமது ஆகியோருக்கு வாய்ப்பளிக்குமாறு இந்திய வீரர் ராபின் உத்தப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

உத்தப்பா கோரிக்கை:
இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுமா என்பது தெரியவில்லை. இருப்பினும் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ருதுராஜ் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோருக்கு இப்போதும் வாய்ப்பு கொடுக்கவில்லையெனில் அது நியாயமற்றதாக இருக்கும். அதேபோல் சபாஸ் அஹமத்தும் வாய்ப்பு கிடைக்கலாம். அதே சமயம் தற்போது நல்ல பார்மில் விளையாடி வரும் சுப்மன் கில் போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் அது நியாயமற்றதாகும்”

Uthappa

“ஒரு இன்னிங்ஸ்சில் மட்டும் வாய்ப்பு பெற்ற இஷான் கிசானுக்கு பதில் வேறு யாரையாவது சேர்த்தால் தங்களுக்கு முழு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர்களும் நினைப்பார்கள். ஏனெனில் சீனியர்கள் வரும்போது அவர்கள் அணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே 3வது போட்டிக்கான அணியை தேர்வு செய்வது கடினமான ஒன்றாகும். அதேபோல் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய தீபக் சஹர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரை தொடரலாம். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க சுழற்சி முறையில் வாய்ப்பளிப்பது அவசியம்” எனக்கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல ஐபிஎல் 2021 தொடரில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி வென்று சென்னை 4வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கைக்வாட் அதன்பின் நடந்த விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரிலும் 3 சதங்கள் உட்பட 600 ரன்களை வெளுத்து வாங்கிய போதிலும் இதுவரை இந்தியாவுக்காக விளையாடிய டி20 போட்டிகளில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக ஒருநாள் போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : IND vs ZIM : கே.எல் ராகுலின் சுயநல முடிவின் பின்னனியை உடைக்கும் முன்னாள் வீரர் – விவரம் இதோ

மறுபுறம் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் ராகுல் திரிபாதி கடுமையான போராட்டத்திற்கு பின் சமீபத்திய அயர்லாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்ட போதிலும் வாய்ப்பு பெறாமல் இன்னும் பெஞ்சில் அமர்ந்து வருகிறார். எனவே இவர்களுக்கு 3வது போட்டியில் வாய்ப்பு கொடுப்பதே நியாயமான முடிவாக இருக்கும்.

Advertisement